பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பற்றிய தனது ட்வீட்டிற்கு நடிகர் சித்தார்த் மன்னிப்பு கேட்டிருந்த நிலையில், இதற்கு சில பிரபலங்கள் தற்போது சில கமெண்ட்டுகளை பதிவு செய்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன், பிரதமர் மோடி, பஞ்சாப் மாநிலத்திலுள்ள பெரோஸ்பூருக்கு சென்றிருந்தார். அப்போது அங்குள்ள போராட்டக்காரர்கள், மோடி செல்லும் வழியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு குறைபாட்டின் காரணமாக, பஞ்சாப் சுற்றுப்பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு, டெல்லிக்கு திரும்பினார் பிரதமர் மோடி.
இதன் சம்பவம் காரணமாக, பஞ்சாபின் காங்கிரஸ் அரசுக்கு எதிராக, பாஜக ஆதரவாளர்கள் பலர், கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தனர். பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலும் பிரதமருக்கு ஆதரவான கருத்துக்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
மிகப்பெரிய சர்ச்சை
இந்நிலையில், சாய்னாவின் கருத்திற்கு, நடிகர் சித்தார்த், பேட்மணடன் விளையாட்டுடன் ஒப்பிட்டு, இழிவான கருத்து ஒன்றைத் தெரிவித்திருந்தார். சித்தார்த்தின் இந்த கருத்து, மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கியது. மேலும், இது பற்றி பலர் தங்களது கண்டனங்களையும் தெரிவித்திருந்தனர்.
சாய்னாவின் கணவர் மற்றும் தந்தை உள்ளிட்டோரும், சித்தார்த்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தனது ட்வீட் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என சித்தார்த்தும் விளக்கம் அளித்திருந்தார். ஆனால், அதனை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிகிறது.
மன்னிப்பு கேட்ட சித்தார்த்
அது மட்டுமில்லாமல், நடிகர் சித்தார்த் மீது வழக்குப் பதிவு செய்யவும், மகாராஷ்டிர காவல்துறை டி.ஜி.பி-க்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பியிருந்தது. நாடெங்கிலும் சித்தார்த்தின் கருத்திற்கு, கண்டனங்கள் வலுத்த நிலையில், அவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், சாய்னாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தீய நோக்கம் கொண்டதில்லை
அந்த மன்னிப்பு அறிக்கையில், நான் எழுதிய பதிலில் இருந்த rude ஆன ஜோக்கிற்காக மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் என குறிப்பிட்டிருந்தார். அதே போல, எனது வார்த்தை விளையாட்டானது, எந்தவித தீய நோக்கம் கொண்டதில்லை என்பதையும் நான் வலியுறுத்திக் கொள்கிறேன் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
நீங்கள் தான் சாம்பியன்
மேலும், ஒரு பெண்ணாக இருப்பதால் தான், உங்களை தாக்க வேண்டும் என்ற நோக்கம் நிச்சயமாக எனக்கு ஏற்படவில்லை என்றும், நீங்கள் என் கடிதத்தை ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன் என்றும், நீங்கள் எப்போதும் என் சாம்பியன் தான் என்றும், சித்தார்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, சித்தார்த்தின் மன்னிப்பு கடிதமும், சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாக தொடங்கியது.
தைரியம் வேண்டும்
பரபரப்பு கமெண்ட்
இதனைக் கவனித்த நடிகை கஸ்தூரி, 'தைரியமா?. அனைத்து வகையிலும் அவரின் கருத்து, பெரும் சீற்றத்தைத் தான் ஏற்படுத்தியுள்ளது' என பரபரப்பு கமெண்ட் ஒன்றைச் செய்துள்ளார். இதன் கீழும், ரசிகர்கள் பல விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, சாய்னா நேவால் குறித்த சித்தார்த்தின் ட்வீட்டிற்கு, நடிகை கஸ்தூரி தனது எதிர்ப்பினை தெரிவித்திருந்தார்.