நடிகர் சித்தார்த் ஒலிம்பிக் பதக்கம் வென்ற பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து பதிவிட்ட ட்வீட்டுக்கு தற்போது பொதுமன்னிப்பு கேட்டுள்ளார்.
பிரதமர் சுற்றுப்பயணம்
முன்னதாக கடந்த பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூருக்கு பிரதமர் மோடி போனபோது போராட்டக்காரர்கள் வழிமறித்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அதன் பின்னர் பாதுகாப்பு குறைபாடு காரணமாக பஞ்சாப் சுற்றுப் பயணத்தை ரத்து செய்துவிட்டு பிரதமர் மோடி டெல்லி திரும்ப, இதனால் பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக ஆதரவு தளத்தில் இருந்து கண்டனங்கள் எழுந்தன.
சித்தார்த் - சாய்னா நேவால்
இதற்கு பிரதமர் மோடிக்கு ஆதரவாக We Stand With Modi எனும் ஹேஸ்டேக் டிரெண்ட் ஆனது. இதில் பிரமதமர் தரப்புக்கு ஆதரவாக பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது கண்டனத்தை பதிவு செய்தார். அதன் பின் சாய்னா நேவாலுக்கு ட்விட்டரில் பதில் அளித்த சித்தார்த்துக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. குறிப்பாக சித்தார்த் மீது வழக்கு பதிவு செய்யவும் தேசிய மகளிர் ஆணையம், மகாராஷ்டிர காவல்துறை டி.ஜி.பி-க்கு கடிதம் அனுப்பியது.
சித்தார்த் மன்னிப்பு
அதன் பின்னரும் நடிகர் சித்தார்த் மீண்டும் (10.01.2022) அன்று "தான் கூறிய பதில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக குறிப்பிட்ட மறு ட்வீட்டும் செய்திருந்தார். இந்நிலையில் நடிகர் சித்தார்த் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்புள்ள சாய்னா, முன்னதாக உங்கள் ட்வீட் ஒன்றிற்கு நான் எழுதிய பதிலில் இருந்த ஒரு rude-ஆன ஜோக்கிற்காக உங்களிடம் நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.
நியாயப்படுத்திவிட முடியாது.
பல கருத்துக்களில் உங்களுடன் நான் உடன்படாமல் இருக்கலாம். ஆனால் உங்கள் ட்வீட்டைப் படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் அல்லது கோபம் கூட எனது அந்த பதிவ்வுக்கு காரணமாக இருக்கலாம். இருப்பினும் நான் பேசிய தொனியையும் வார்த்தைகளையும் நியாயப்படுத்திவிட முடியாது. அதைவிட அதிக அழகான தன்மை என்னிடம் இருக்கிறது என்பதை நான் அறிவேன்.
ஜோக்கைப் பொறுத்தவரை... அந்த ஜோக்கை விளக்க வேண்டும் என்றால், அது ஒரு நல்ல ஜோக்காக வந்திருக்கவில்லை. சரிவர எடுபடாத அந்த ஜோக்கிற்காக மன்னிக்கவும். எவ்வாறாயினும், எனது அந்த வார்த்தை விளையாட்டு மற்றும் நகைச்சுவையானது எவ்விதமும் தீய நோக்கம் கொண்டிருக்கவில்லை என்பதை நான் வலியுறுத்திக் கொள்கிறேன்.
நீங்கள் எப்போதும் என் சாம்பியன்
நானும் ஒரு உறுதியான பெண்ணிய தோழமையாளன் என்றும், எனது ட்வீட்டில் பாலினம் பேதம் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும், குறிப்பாக ஒரு பெண்ணாக இருப்பதாலேயே உங்களைத் தாக்கும் நோக்கம் நிச்சயமாக இல்லை என்றும் உறுதியளிக்கிறேன். நீங்கள் எனது கடிதத்தை ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன். நீங்கள் எப்போதும் என் சாம்பியன், நேர்மையுடன் சித்தார்த்.” என குறிப்பிட்டுள்ளார்.
Also Read: நிரூப் சொன்ன ஒரு வார்த்தை!.. மொத்த சண்டையும் மறந்து கண்ணீர் விட்டுட்டாங்க பிரியங்கா!