நடிகர் ஷாந்தனு விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்த தன் அனுபவத்தை நம்முடன் உற்சாகமாக பகிர்ந்து கொண்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வருபவர் ஷாந்தனு. நடிகரும் இயக்குநருமான பாக்யராஜின் மகனான இவர், சக்கரக்கட்டி திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதையடுத்து இவர் தற்போது விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் ஷாந்தனு, நம்மிடம் மாஸ்டர் படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, ''முதலில் நான் மாஸ்டர் படத்தில் இருக்கிறேன் என சொல்லியதை என்னால் நம்பவே முடியவில்லை. டெல்லி ஷூட்டிங்கில் தான் நான் விஜய் சாருடன் முதன் முதலில் நடித்தேன். அந்த அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது. மேலும் விஜய் சார் மற்றும் படக்குழுவினருடன் நாங்கள் டெல்லியில் வெளியில் சென்றோம். அப்போது விஜய் அவர்கள் மாஸ்க் கூட அணியாமல், மிக இயல்பாக ரோட்டில் நடப்பவற்றை ரசித்து கொண்டு வந்தார்'' என மனம் திறந்து பேசினார்.
மேலும் தனது கல்யாணத்திற்கு விஜய் வந்து தாலி எடுத்து கொடுத்தது, மாஸ்டர் படத்தின் ட்ரெய்லர், லோகேஷ் கனகராஜுடன் வேலை செய்தது, கவுதம் மேனனுடன் ஒரு சான்ஸ் கொடு பாடல் என பல விஷயங்கள் குறித்து ஷாந்தனு உற்சாகம் குறையாமல் பேசினார்.