நடிகர் ஷாந்தனு ட்விட்டரில் நகைச்சுவையாக கொடுத்த ரிப்ளை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக கலக்கி வருபவர் ஷாந்தனு. இயக்குநர் கே.பாக்யராஜின் மகனான இவர் தற்போது விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இது மட்டுமின்றி அண்மையில், கவுதம் இயக்கிய ஒரு சான்ஸ் கொடு பாடலில், ஷாந்தனுவின் நடனம் பெரிதும் ரசிக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகர் ஷாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் விஷ்ணு விஷாலுடன் ஜாலி அரட்டை அடித்துள்ளார். தனது தந்தைக்கு முடி வெட்டி விட்ட புகைப்படத்தை பதிவிட்ட விஷ்ணு விஷாலிடம், ''மச்சி, எனக்கும் இப்போது முடி கட் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறேன்'' என கேட்டிருந்தார் ஷாந்தனு. இதற்கு விஷ்ணு விஷால், ''நீ எப்போது ரெடியாக இருந்தாலும் ஓகே, முதலில் உன் மனைவி கீகியிடம் பர்மிஷன் கேட்டுக்கொள்'' என ரிப்ளை கொடுத்தார். இதையடுத்து விஷ்ணு விஷாலின் பதிவுக்கு ஷாந்தனு, ''இதுக்கு எதுக்கு பர்மிஷன், நான் கட் தானே கேட்டேன், கட்டிங் இல்லையே'' என தனது அப்பா பாக்யராஜின் குசும்புடன் ரிப்ளை கொடுத்துள்ளார். ஷாந்தனு மற்றும் விஷாலின் இந்த ஜாலி ட்வீட்ஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.