நடிகர் ஷாம் தனது வீட்டில் சூதாட்டம் நடப்பதாக போலீஸார் நடத்திய ரெய்டு குறித்து பளீச் பதில்கள் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக கலக்கி வந்தவர் நடிகர் ஷாம். இவர் நடித்த 12-B, இயற்கை, உள்ளம் கேட்குமே, லேசா லேசா உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இவர் தற்போது தெலுங்கு திரைப்படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே, அண்மையில் நடிகர் ஷாம் வீட்டில் சூதாட்டம் நடப்பதாக சொல்லி, காவல்துறையினர் ரெய்டு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து நடிகர் ஷாம் நம்மிடம் பளீச் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, ''நானும் என் நண்பர்களும் லாக்டவுன் என்பதால், வீட்டில் ஃப்ரென்ட்லியாக சீட்டு கட்டு விளையாடினோம். யாரோ இதை தவறாக தகவல் கொடுத்ததால், காவல்துறையினர் வந்து சோதனையிட்டார்கள். பிறகு இங்கு பணம் ஏதும் வைத்து விளையாடப்படவில்லை என தெரிந்த பிறகு, வெறும் கையெழுத்து போடவே எங்களை அழைத்து சென்றார்கள். 5 நிமிடத்தில் இது எல்லாம் முடிந்துவிட்டது. இங்கு எந்த சூதாட்டமும் நடக்கவில்லை. ஆனால், இதை பற்றி வரும் செய்திகள் அனைத்தும் முற்றிலும் தவறானவையாக இருக்கிறது'' என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்விவகாரம் குறித்து நடிகர் ஷாம் பேசிய முழு வீடியோ இதோ.,