22 வருடங்களுக்கு பின் #THALAPATHY66 படத்தில் விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர்.. இவர் தான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த ஆண்டு சமீபத்தில் தான், தளபதி 66 படத்தினை வம்சி படிப்பள்ளி இயக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Advertising
>
Advertising

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் இந்த படம் பேமிலி டிராமா வகைமையில் உருவாகிறது என்றும், படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவில்லை என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் பூஜை சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதில் இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜூ, ராஷ்மிகா மந்தனா, நடிகர் விஜய் கலந்து கொண்டனர். இந்த பூஜையில் நடிகர் சரத்குமாரும் கலந்து கொண்டுள்ளார். இந்த படத்தில் விஜய் உடன் முதல்முறையாக இணைந்து நடிக்க உள்ளார். இந்த படத்தில் எடிட்டராக பிரவீன் கே எல் இணைந்துள்ளார். விஜய்யின் பைரவா படத்தின் எடிட்டரும் இவர் தான். வமசியின் சில படங்களில் எடிட்டராகவும் பணியாற்றி உள்ளார்.

இப்படத்திற்கு வம்ஷி பைடிப்பள்ளியுடன் இணைந்து கதை, திரைக்கதையை ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன் எழுதியுள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய உள்ளார். தில் கார்த்திக் பழனி பென்குயின், ஆடிபுருஷ் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். கார்த்திக் பழனி மெர்குரி (2018) மற்றும் பேட்ட (2019) ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளர் திருவின் உதவியாளராக பணியாற்றினார். பல ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் உதவி ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றினார்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளது. மேலும் பாடல் பதிவும் தமன் இசையில் நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் ஷாம் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக  இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். இவர் 22 வருடங்களுக்கு முன் விஜய்யுடன் குஷி படத்தில் விஜய்யின் நண்பராக நடித்தவர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.


https://www.behindwoods.com/bgm8/

22 வருடங்களுக்கு பின் #THALAPATHY66 படத்தில் விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர்.. இவர் தான்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actor Shaam on board for thalapathy 66 movie vamsi

People looking for online information on Shaam, Thalapathy66, Vamsi, Vijay, Vijay66 will find this news story useful.