அட..! நம்ம பிக்பாஸ் சென்றாயானா இது.?! - கோட் சூட் கெட்டபில் மாஸ் போட்டோஸ்... செம வைரல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சென்றாயனின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஹிட் அடித்துள்ளது. 

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சென்றாயன். இவர் தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும் மூடர் கூடம் திரைப்படத்தில் இவரது நகைச்சுவையான நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவர் பிக்பாஸ் போட்டியிலும் கலந்து கொண்டார். மேலும் இவர் தொடர்ந்து பல படங்களில், சிறிய வேடங்களில் பிசியாக நடித்து வருகிறார். 

இந்நிலையில் நடிகர் சென்றாயனின் புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஹிட் அடித்துள்ளன. புகைப்பட கலைஞர் ராகுல் ரகுபதி எடுத்துள்ள இந்த புகைப்படங்களில், சென்றாயன் கோட் சூட் உடையில் செம ஸ்டைலிஷாக இருக்கிறார். இணையத்தில் வெளியாகியுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதோடு, வைரல் ஆகி வருகின்றது. 

 

கோட் சூட்டில் சென்றாயன் மாஸ் லுக் போட்டோஸ் வைரல் | actor sendrayan's stylish look photos goes viral

People looking for online information on BIGGBOSS TAMIL, Sendrayan, Sendrayan Stylish Photos will find this news story useful.