பெரும் சோகம்! மருத்துவமனையில் உயிரிழந்த நடிகர் சத்யராஜின் சகோதரி கல்பனா மன்றாடியார்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தமிழ் மற்றும் தென்னிந்திய நடிகரான சத்யராஜ், 80களில் இருந்தே தமிழ்ப்படங்களில் ஹீரோவாகவும், குணச்சித்திர வேடங்களிலும், வில்லனாகவும் என பன்முகங்களில் நடித்து வருபவர். இவரது மகன், இளம் நடிகர் சிபி சத்யராஜ்.

Actor Sathyaraj Sister Passed away சத்யராஜின் சகோதரி காலமானார்
Advertising
>
Advertising

தெலுங்கு படமான பாகுபலியில் கட்டப்பாவாக நடித்ததன் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகர் சத்யராஜ் கொங்கு மண்டலமான கோவை பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர். நடிகர் சத்யராஜின் சகோதரிதான் கல்பனா மன்றாடியார்.

Actor Sathyaraj Sister Passed away சத்யராஜின் சகோதரி காலமானார்

இவர்தான் தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சைப் பலனின்றி டிசம்பர் 5-ஆம் தேதி காலை உயிரிழந்தார். 66 வயதான கல்பனா மன்றாடியார், திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் வசித்து வந்த நிலையில் அவர் காலமாகியுள்ளார். 

நடிகர் சத்யராஜின் சகோதரி மறைந்த இந்த தகவலைத் தொடர்ந்து திரையுலகினரும், ரசிகர்களும் நடிகர் சத்யராஜூக்கு சமூக வலைதளங்களில் தங்களின் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

தொடர்புடைய இணைப்புகள்

Actor Sathyaraj Sister Passed away சத்யராஜின் சகோதரி காலமானார்

People looking for online information on Actor Sathyaraj Sister Passed away, நடிகர் சத்யராஜ் சகோதரி கல்பனா மன்றாடியார் காலமானார், KalpanaManradiyar, RIP, Sathyaraj will find this news story useful.