“நம்ம படத்துல என் பேரு ரோல்ஸ் ராய்ஸ்”… கொக்கி போட்ட சதீஷ்… S R பிரபுவின் செம்ம REPLY

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றியை அடுத்து நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்தது இணையத்தில் கவனம் பெற்றது.

Actor sathish Producer S R Prabhu jolly conversation in twiiter
Advertising
>
Advertising

விக்ரம் வெற்றி…


கமல்ஹாசன் நடிப்பில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு ஜூன் 3 ஆம் தேதி  ‘விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்புகள் ரிலீஸுக்குப் பின் அதைப் பூர்த்தி செய்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.

Actor sathish Producer S R Prabhu jolly conversation in twiiter

படக்குழுவினருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கமல்…

விக்ரம் படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் & நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு 'லெக்ஸஸ்' ரக காரை பரிசாக அளித்துள்ளார். இந்த கார் ஜப்பான் நாட்டின் பிரபல டுயோட்டா நிறுவனத்தின் பிரீமியம் பிராண்ட் ஆகும்.  இந்த லெகஸஸ் செடான் வகை காரின் விலை 60 லட்ச ரூபாய் முதல் 70 லட்சம் வரை சென்னையில் விற்கப்படுகிறது. மேலும் உதவி இயக்குனர்கள் 13 பேருக்கு மோட்டார் பைக்குகளையும் அளித்துள்ளார்.

சூர்யாவுக்கு ரோலக்ஸ்…

அதையடுத்து இப்போது படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு வேடத்தில் தோன்றி ரசிகர்களைக் கவர்ந்த சூர்யா தான் பயன்படுத்தி வந்த விலையுயர்ந்த ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை பரிசாக வழங்கியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்களை நடிகர் சூர்யா பகிர, இப்போது அவை இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சதிஷ் & S R பிரபு ஜாலி Tweets

இந்நிலையில் அந்த டிவீட்டை பகிர்ந்த  நகைச்சுவை நடிகர் தான் முக்கிய வேடத்தில் நடித்துள்ள கணம் படத்தின் தயாரிப்பாளர் S R பிரபுவை டேக் செய்து “நம்ம படத்துல என் பேரு ரோல்ஸ் ராய்ஸ் ப்ரோ” என கூறியிருந்தார். இதன் மூலம் நீங்கள் எனக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கித் தரவேண்டும் என்பது போல சூசகமாக உணர்த்தியிருந்தார். சதீஷின் இந்த டிவீட்டுக்கு பதிலளித்துள்ள S R பிரபு “ரிலீஸுக்கு முன்னாடி ஊர்ல திருவிழா வருது ப்ரோ.. அதுல வாங்கி வச்சிடலாம்” எனக் கூறியுள்ளார். இவர்கள் இருவரின் இந்த டிவீட்டும் தற்போது இணையத்தில் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor sathish Producer S R Prabhu jolly conversation in twiiter

People looking for online information on Kamal, Rolex, S R Prabhu, Sathish, Suriya will find this news story useful.