வாவ்.. சதீஷ் - பவித்ரா நடித்த ‘நாய் சேகர்’…. பிரபல டிவி சேனலில் .. எதுல? எப்போ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சதீஷ் நடித்துள்ள நாய் சேகர் படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

Advertising
>
Advertising

CWC அஸ்வினின் ‘என்ன சொல்ல போகிறாய்’….”Most waited டிஜிட்டல் ரிலீஸ்”- வெளியான update!

முன்னணிக் கலைஞர்கள் நடித்த நாய் சேகர்…

நகைச்சுவை வேடங்களுக்கு பெயர் பெற்ற சதீஷ், நாய் சேகர் படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமானார். மேலும் குக் வித் கோமாளி புகழ் பவித்ரா லட்சுமி இந்த படத்தின் வாயிலாக வெள்ளித்திரையில் அறிமுகமாகி, சதீஷின் ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நாய் கேரக்டருக்கு நடிகர் மிர்ச்சி சிவா டப்பிங் பேசி இருந்தது கவனத்தைப் பெற்றது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்துக்கு, பிரவீன் பாலு ஒளிப்பதிவு செய்ய, ராம் பாண்டியன் படத்தொகுப்பை மேற்கொண்டார். எம் ஜி முருகன் இப்படத்தின் கலை இயக்குனராக பணியாற்றினார். பாடல்களை சிவகார்த்திகேயன், விவேக் மற்றும் இயக்குநர் கிஷோர் ராஜ்குமார் ஆகியோர் எழுதி இருந்தனர்.

வில்லனாக சங்கர் கணேஷ்…

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான சங்கர் கணேஷ் இப்படத்தின் எதிர் நாயகனாக நடித்திருந்தார். ஜார்ஜ் மரியன், 'லொள்ளு சபா' மாறன், இளவரசு, லிவிங்ஸ்டன், மனோபாலா, ஞானசம்பந்தம் மற்றும் 'கலக்கப் போவது யாரு' பாலா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்தனர். எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாய் சேகர் திரைப்படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி வெளியானது.

படத்தின் கரு…

"ஒரு மனிதன் நாயாகவும், நாய் மனிதனாகவும் மாறினால் என்ன நடக்கும் என்பது தான் இந்த படத்தின் மையக்கரு. தொடக்கம் முதல் கிளைமேக்ஸ் வரை முழுநீள நகைச்சுவை திரைப்படமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் நாய் இருக்கும்” என படத்தின் இயக்குனர் படத்தின் ரிலீஸின் போது அறிவித்திருந்தார்.

தொலைக்காட்சி பிரிமீயர்…

இந்நிலையில் நாய்சேகர் படம்  திரையரங்குகளில் வெளியாகி மூன்று மாதங்கள் கழித்து தற்போது தொலைக்காட்சி பிரீமியராக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.  வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு இந்த படம் சன் டிவியில் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதை சதீஷ் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

”ம்யூசிக்கல்…. மேஜிக்கல்… workmode”… இளையராஜா, ஐஸ்வர்யா ரஜினி சந்திப்பு – viral photos!

தொடர்புடைய இணைப்புகள்

Actor sathish comic Naai sekar word Television premiere update

People looking for online information on Kishore Rajkumar, Naai Sekar Movie, Sathish, Sathish comic Naai sekar will find this news story useful.