ராமேஸ்வரம் கோயில் யானையுடன் நடிகர் சசிகுமார்.. அவரே பகிர்ந்த அருமையான போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் & நடிகர் சசிகுமார், ராமேஸ்வரம் கோயில் யானையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | வெந்து தணிந்தது காடு 'இசக்கி புரோட்டா'.. இந்த பிரபல ஹோட்டல்ல மட்டும் தான் கிடைக்குமாம்!

2008 ஆம் ஆண்டு வெளிவந்த சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானார் சசிகுமார்.‌ இந்த சுப்ரமணியபுரம் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தமிழ் சினிமாவில் முக்கிய படமாக அமைந்தது.

சசிகுமார், இயக்குனர் பாலாவிடம் சேது படத்திலும், அமீருடன் மௌனம் பேசியதே, ராம் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஆவார்.

தற்போது சசிகுமார் நடிப்பில் பகைவனுக்கு அருள்வாய், காரி, அயோத்தி ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. கடைசியாக இந்தாண்டு பொங்கலுக்கு சசிகுமார் நடிப்பில் "கொம்பு வச்ச சிங்கம்டா" படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர் ரவீந்திரன், சசிகுமார் நடிப்பில் மந்திர மூர்த்தி இயக்கத்தில் உருவாகும் 'அயோத்தி' திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு நவம்பர் மாதம் துவங்கி, மதுரை மற்றும் ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதிகளில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது.

'குக் வித் கோமாளி' புகழ், போஸ் வெங்கட் மற்றும் யஷ்பால் சர்மா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். என் ஆர் ரகுநந்தன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார், மாதேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இயக்குனர் நடிகர் சசிகுமார் தனது முகநூல் பக்கத்தில், ராமேஸ்வரம் கோயில் யானை ராமலெட்சுமி, தனக்கு ஆசிர்வாதம் செய்யும் Throwback புகைப்படத்தை பகிர்ந்து விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை கூறியுள்ளார்.

Also Read | விஷால் நடிக்கும் 'லத்தி'.. சாந்தமான லுக்கில் புதிய போஸ்டர்! விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்

Actor Sasikumar with Rameshwaram Temple Elephant Rama Lakshmi

People looking for online information on Elephant Rama Lakshmi, Rameshwaram temple, Sasi Kumar, Sasikumar visit Rameshwaram Temple will find this news story useful.