’பீஸ்ட்’ TEAM-க்கு வாழ்த்து சொன்ன ‘தளபதி 66’ நடிகர்!... வைரலாகும் போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பீஸ்ட் படத்தின் ரிலீஸை ஒட்டி முன்னணி நடிகர் படக்குழுவினருக்கு வாழ்த்துகளைக் கூறியுள்ளார்.

Advertising
>
Advertising

”சிலிர்க்க வைக்கும் சவுண்ட் எபெக்ட்ஸ்”… பீஸ்ட் படத்தின் லேட்டஸ்ட் தெறி Glimpse!

இன்னும் ஒருநாளில்…

விஜய்யின் 65 ஆவது படமான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களின் நீண்ட கால காத்திருப்புக்குப் பலனாக நாளை (ஏப்ரல் 13) உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய் வீரராகவன் என்ற உளவுத்துறை அதிகாரியாக நடித்துள்ளார். அவரோடு பூஜா ஹெக்டே ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். யோகிபாபு, ரெட்டின்ஸ் கிங்ஸ்லே மற்றும் இயக்குனர் செல்வராகவன்  ஆகியோர் மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, நெல்சன் இயக்கியுள்ளார். பேன் இந்தியா திரைப்படமாக 5 மொழிகளில் வெளியாகிறது.

பீஸ்ட் வெளியீடு…

பீஸ்ட் படத்தின் தமிழக திரையரங்க விநியோக உரிமையை முன்னணி தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தெலுங்கில் விஜய் 66 படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு பீஸ்ட் படத்தை வெளியிடுகிறார். மலையாளத்தில் மேஜிக் ப்ரேம்ஸ் நிறுவனத்தினர் வெளியிடுகின்றனர். பாலிவுட்டிலும் கணிசமான திரையரங்குகளில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகிறது. ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமையையும் ஐங்கரன் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

ஆர்வத்தைத் தூண்டும் ப்ரமோஷன்கள்…

பீஸ்ட் படம் ஆரம்பத்ததில் இருந்து அவ்வப்போது படம் சம்மந்தமான தகவல்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி வந்தது படக்குழு. இதுவரை வெளியான போஸ்டர்கள், பாடல்கள் மற்றும் டிரைலர் அனைத்தும் படத்தை பார்க்கும் ஆர்வத்தை தூண்டும் விதமாக அமைந்தன. படத்தின் ரிலீஸை ஒட்டி பல ப்ரமோஷன்களை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இன்று வெளியிடப்பட்ட போஸ்டர் மற்றும் புதிய கிளிம்ப்ஸ் வீடியோ ஆகிய இரண்டும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.

வாழ்த்திய சரத்குமார்…

பீஸ்ட் படத்தின் ரிலீஸை அடுத்து நடிகர் சரத்குமார் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. அதில் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள சரத்குமார், ”சகோதரர் திரு விஜய் நடிப்பில், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் அவர்கள் தயாரிப்பில், திரு நெல்சன் இயக்கத்தில் வெளிவரும் பீஸ்ட் திரைப்படம்  வெற்றி பெற படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” எனக்கூறியுள்ளார். சரத்குமார் சமீபத்தில் நடந்த தளபதி 66 பட பூஜையில் கலந்துகொண்டார். மேலும் அவர் அந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

20 years of imman: தமிழன் to அண்ணாத்த… ‘மாஸும் கிளாஸும்’ கலந்த பயணம்- இயக்குனர் வாழ்த்து

தொடர்புடைய இணைப்புகள்

Actor sarathkumar wished Beast team for a success

People looking for online information on Sarathkumar, Sarathkumar wishes Beast team, Sun pictures, Thalapathy 66, Vijay will find this news story useful.