சென்னை : 'வலிமை' படத்தின் டிரெய்லரைப் பார்த்து நடிகர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் செய்த டிவிட்டர் விமர்சனம் டிவிட்டரில் வைரலாகி வருகிறது.

வலிமை டிரெய்லர்
வலிமை படத்தின் டிரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சினிமாத் துறையில் உள்ள பலர், குறிப்பாக தமிழ் சினிமா அல்லாத தெலுங்கு இந்தி சினிமாவின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் வலிமை படத்தின் டிரெய்லரை பாராட்டி வருகின்றனர். வலிமை படத்தின் டிரெய்லரில் மிக முக்கிய அம்சமாக பைக் சேஸிங் காட்சிகளும் சண்டைக்காட்சிகளும் அமைந்துள்ளது. இந்த சேஸிங் காட்சிகளுடன் வலிமை படத்தின் எடிட்டிங், ஒளிப்பதிவு, பிண்ணனி இசை, உடையமைப்பு, கலை இயக்கமும் பாராட்டை பெற்று வருகிறது.
விஸ்வாசம், மாஸ்டர் பட சாதனையை ரிலீஸ்க்கு முன்பே முறியடித்த வலிமை!
சரத்குமார்
தற்போது வரை வலிமை பட டிரெய்லர் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ச்சாதனை படைத்துள்ளது. 2022 ஜனவரி 13 பொங்கலை முன்னிட்டு வலிமை படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இந்த வலிமை படத்தின் டிரெய்லர் பற்றி ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு நடிகர் சரத்குமார் டிவிட்டரில் பதில் அளித்துள்ளார். அதில் ''சூப்பர்! படத்தை பார்க்க காத்திருக்கிறேன்'' " Superb,waiting for the film" என டிவீட் செய்துள்ளார். இந்த டிவீட் தற்போது வைரலாகி வருகிறது.
வலிமை படக்குழு
இந்த படத்திற்கு கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அனு வர்தன் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார், சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 'வலிமை' படம் சென்சாரகி உள்ளது. CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் இந்த படம் 178 (2:58) மணி நிமிடங்கள் ஓடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களின் மேற்பார்வையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்த படத்தை பார்க்கலாம்.
அஜித்குமார் நடிக்கும் 'வலிமை' பட பிரான்ஸ் தியேட்டர் உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!