BREAKING: ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் புதிய படத்தின் வில்லன் சரத்குமாரா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை:  ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் புதிய படத்தின் மிக முக்கியமான புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.

Advertising
>
Advertising

ருத்ரன் படக்குழு

பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகும் படம் ருத்ரன். இத்திரைப்படத்தில் ப்ரியா பவானி சங்கர் லாரன்சுக்கு ஜோடியாக நடிக்கிறார்.  கே.பி.திருமாறன் கதை, திரைக்கதை எழுதுகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பில்லா 2, மாஸ், காக்க காக்க படங்களின் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் ISC ஒளிப்பதிவு செய்கிறார்.

வீரத்திருமகன்

இந்த படம் ஏப்ரல் 14, 2022 தமிழ் புத்தாண்டிற்கு வெளியாக உள்ளது. இதை படக்குழு அதிகாரப்ப்பூர்வமாக ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இப்படத்தின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டும் வகையில் பழைய கிளாசிக் படமான வீரத்திருமகன் படத்தில் இடம்பெற்ற பிரபல பாடலான ‘பாடாத பாட்டெல்லாம்’ பாடலை  ரீமிக்ஸ் செய்துள்ளனர். ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட்டில் இப்பாடலின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டுள்ளது. இப்பாடலுக்கு நடன இயக்குனராக ஶ்ரீதர் பணியாற்றியுள்ளார்.

"ஜெய்பீம்" லிஜோமோல் ஜோஸ், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கும் புதிய ஆந்தாலஜி படம்.. வெளியான Feel Good Trailer!

 

சரத்குமார்

“ருத்ரன்” படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.  ஏற்கனவே நான்கு கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் துவங்கி உள்ளது. இதில் நடிகர் சரத்குமார் பங்குபெறும் காட்சிகள் இன்றுமுதல் படமாக்கபட உள்ளன. இந்த படத்தில் வில்லனாக சரத்குமார் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கோடிஸ்வரராக ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்துள்ள நபராக சரத்குமார் இந்த படத்தில் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர்கள்

ராகவா லாரன்ஸ்

பிரியா பவானி சங்கர்

நாசர்

பூர்ணிமா பாக்யராஜ்

தொழில் நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு -  5 Star கிரியேஷன்ஸ்

இசை - G.V.பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு - R.D.ராஜசேகர்

மக்கள் தொடர்பு - சதீஷ் (AIM)

கதை, திரைக்கதை - K.P.திருமாறன்

இயக்கம் - 5 ஸ்டார் S.கதிரேசன்

ஷூட்டிங் ஸ்பாட் விசிட்.. சிம்புவை சந்தித்த பிக் பாஸ் - 5 பிரபலம்.. வைரலாகும் ஃபோட்டோ

 

தொடர்புடைய இணைப்புகள்

Actor sarath kumar plays a negative role in rudhran

People looking for online information on சரத்குமார், பிரியா பவானி சங்கர், ராகவா லாரன்ஸ், ருத்ரன், Lawrence film, Negative role, Rudhran, Sarath Kumar will find this news story useful.