THALAPATHY66 : விஜய்யுடன் நடிக்க போகும் சூப்பர் ஹீரோ.. இந்த காம்பினேஷன் பட்டைய கிளப்பும்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் 66 வது படத்தில் சூப்பர் ஹீரோ இணைவது பற்றிய அப்டேட்  வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

‘வாத்தி’ இயக்குனருக்கு வாழ்த்து –ஸ்கூல் பையன் கெட்டப்பில் தனுஷின் viral pic!

கோலிவுட்டில் உள்ள மாஸ் ஹீரோக்களில் ஒருவர் விஜய். தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். விஜய் தமிழகத்தில் மட்டுமல்லாது பரவலான ரசிகர்களை அண்டை மாநிலங்களிலும் கொண்டுள்ளார்.  லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் விஜய் கடைசியாக திரையில் காணப்பட்டார்.

இந்த படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதிக்கு இடையேயான காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றது. கோவிட் லாக்டவுனுக்கு பிறகு கடந்த 2021 ஆண்டின் தொடக்கத்தில் வெளியான படங்களில் ஒன்றாக இந்தப் படம் இருந்தது.

நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் தனது 65 வது படமான பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல்கள், முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு சமீபத்தில் தான், இவரது அடுத்த படம் - தளபதி 66 படத்தினை வம்சி படிப்பள்ளி இயக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

மேலும் இந்த படம் பேமிலி டிராமா வகைமையில் உருவாகிறது என்றும், படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவில்லை என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று இந்த படத்தின் பூஜை சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதில் இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜூ, ராஷ்மிகா மந்தனா, நடிகர் விஜய் கலந்து கொண்டனர்.

இந்த பூஜையில் நடிகர் சரத்குமாரும் கலந்து கொண்டுள்ளார். இந்த படத்தில் விஜய் உடன் முதல்முறையாக இணைந்து நடிக்க உள்ளார்.

இதனை நடிகை ராதிகா சரத்குமார் அதிகாரப்பூர்வமாக டிவிட்டரில் அறிவித்துள்ளார்.

 

தீவிர அஜித் ரசிகர்... இப்போ தளபதி விஜய்க்கு இசையமைப்பாளர்! தமன் பகிர்ந்த சூப்பர் ட்வீட்

 

தொடர்புடைய இணைப்புகள்

Actor Sarath Kumar Doing a Role in Thalapathy 66 Movie

People looking for online information on R Sarathkumar, Rashmika Mandanna, Thalapathy 66, Thalapathy 66 Movie, Vijay will find this news story useful.