அடடே.. ரஞ்சிதமே பாட்டுக்கு செம்ம டான்ஸ் ஆடிய சரத்குமார்.. வேற லெவல் ஸ்டெப்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடலுக்கு நடிகர் சரத்குமார் நடனம் ஆடும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

Advertising
>
Advertising

விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் கடந்த (11.01.2023) அன்று வெளியாகி உள்ளது.  இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கியுள்ளார்.

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவான இந்த படம் தெலுங்கில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

 

வாரிசு படத்தின்  "ரஞ்சிதமே" பாடலை நடிகர் விஜய் & மானசி பாடியுள்ளனர். ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். தமன் இசையில் பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை எழுதி உள்ளார். இந்த பாடல்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடல் 150 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இந்நிலையில் நடிகர் சரத்குமார், ரஞ்சிதமே பாட்டுக்கு நடனமாடி அசத்திய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. குடும்பத்துடன் சுற்றுலா சென்ற போது பேருந்தில் இந்த நடனத்தை சரத்குமார் ஆடியுள்ளார். ரஞ்சிதமே பாடலை அடுத்து சரத்குமாருடன் வரலெட்சுமி சரத்குமாரும் வீரசிம்மா ரெட்டி படத்தின் ஜெய் பாலையா பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர்.

அடடே.. ரஞ்சிதமே பாட்டுக்கு செம்ம டான்ஸ் ஆடிய சரத்குமார்.. வேற லெவல் ஸ்டெப்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actor Sarath kumar Dancing Varisu Ranjithame Song

People looking for online information on Ranjithame, Sarath Kumar, Varisu will find this news story useful.