நெற்றி நிறைய விபூதி பூசி பழனி மலையில் கிரிவலம் சென்ற சந்தானம்..! வைரலாகும் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சந்தானம்.

Advertising
>
Advertising

Also Read | சமுத்திரக்கனி இயக்கத்தில் பவன் கல்யாண்.. தெலுங்கில் ரிமேக்காகும் சூப்பர்ஹிட் தமிழ்ப்படம்..!

நடிகர் சந்தானம் நடிப்பில் அண்மையில்  நவம்பர் மாதம் 25 ஆம் தேதி ஏஜெண்ட் கண்ணாயிரம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

கதைப்படி ஒரு தனியார் துப்பறியும் நபர், தனது சொந்த ஏஜென்சியை நடத்துகிறார், அவரது உதவியாளரின் (விஜய் டிவி புகழ்) உதவியுடன் சிறிய வழக்குகளை தீர்க்கிறார். இருப்பினும், ஒரு தந்தை (முனிஷ் காந்த்) தனது மகளின் கொலையை  விசாரிக்க வேண்டும் என்று வரும் போது அடுத்து என்ன நடக்கிறது என்பதை மையமாக வைத்து இந்த படம் உருவானது. இயக்குநர் மனோஜ் பீதா இந்த படத்தினை இயக்கினார்.

முன்னதாக ஆடை பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் குளு குளு எனும் திரைப்படத்தில் சந்தானம் முற்றிலும் மாறுபட்ட சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்பில் தற்போது கிக் திரைப்படம் உருவாகி ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.

தற்போது சந்தானம் வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்து வருகிறார். டிக்கிலோனா பட இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது பழனி சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் மேகா ஆகாஷ், ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்க, 'விட்னெஸ்' படப்புகழ் தீபக் ஒளிப்பதிவு செய்கிறார். 'தீரன் அதிகாரம் ஒன்று', 'டெடி' படப்புகழ் சிவ நந்தீஸ்வரன் படத்தொகுப்பை கவனித்துக்கொள்கிறார். கலை இயக்குநராக, 'கோமாளி' படப்புகழ் ராஜேஷ், நடன இயக்குநராக ஷெரிஃப் மாஸ்டர் பணிபுரிகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சந்தானம் பழனி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். முன்னதாக பழனி மலையில் கிரிவலம் சென்ற சந்தானம் மலைப்பாதையில் மூன்று கிலோ மீட்டர் நடந்து வந்தார். மலை அடிவாரத்தில் இருந்து கோயிலுக்கு ரோப் காரில் சென்ற சந்தானம் விரைவு தரிசனம் மூலம் சாமி தரிசனம் செய்துள்ளார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

Also Read | PS1 பொன்னியின் செல்வனை தொடர்ந்து ஜெயம் ரவியின் புதிய படம்.. ரிலீஸ் எப்போ? BREAKING அப்டேட்

நெற்றி நிறைய விபூதி பூசி பழனி மலையில் கிரிவலம் சென்ற சந்தானம்..! வைரலாகும் வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actor Santhanam Visit Palani Murugan Temple Viral Video

People looking for online information on Palani Murugan Temple, Santhanam, Santhanam Visit Palani Murugan Temple will find this news story useful.