இது சந்தானம் STYLE..!! இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட FUNNY ரீல்ஸ்.. ஏன் தெரியுமா? VIDEO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் சந்தானம்.

தனக்கே உரிய பாடி லாங்குவேஜ் மற்றும் காமெடி கவுண்டர்களால் தெறிக்கவிடும் சந்தானம் லொள்ளு சபா நிகழ்ச்சிகளில் கலக்கிய பின்னர் திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். அதன்படி சிம்புவுடன் இணைந்து மன்மதன் திரைப்படத்தில் நடித்த சந்தானம், தளபதி விஜய் நடித்த சச்சின் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்தார். இந்த திரைப்படங்களில் அவருடைய காமெடி பேசப்பட்டது.

தொடர்ந்து தளபதி விஜயுடன் மீண்டும் இணைந்து அழகிய தமிழ் மகன் படத்தில் சந்தானம் நடித்தார். இதேபோல் தனுஷுடன் பொல்லாதவன் திரைப்படத்திலும் நடித்தார். இப்படி பல திரைப்பட நடிகர்களின் படங்களில் சந்தானம் இன்றியமையாத நடிகராக மாறினார். குறிப்பாக எம்.ராஜேஷ் இயக்கத்தில் வெளிவந்த சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற திரைப்படங்களில் ஹீரோவுக்கு நிகராக சந்தானமும் ‘வெயிட்’ காட்டினார்.

ஒரு கட்டத்தில் சந்தானம் தனக்கு ஏற்றபடியிலான காமெடி கதைகளில் ஹீரோவாகவும் நடிக்க தொடங்கினார். அந்தவகையில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம், ஹீரோவாக தம் திரைப் பயணத்தை தொடங்கிய சந்தானம் தொடர்ந்து டகால்டி, பிஸ்கோத், தில்லுக்கு துட்டு 2 பாகங்கள், சக்கைப் போடு போடு ராஜா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.

இந்த நிலையில்தான் நடிகர் சந்தானம், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தம்முடைய ரீல்ஸ் வீடியோவை பதிவிட்டிருக்கிறார். ஆங்கில பாடல் ஒன்றுக்கு நடிகர் சந்தானம் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்து பதிவிட்டதை அடுத்து, ரசிகர்கள் பலரும், அவரிடம் அடுத்த படங்கள் தொடர்பான அப்டேட்டை கேட்டனர். சந்தானமும் இந்த ரீல்ஸை பதிவிடும் போது, இரவு தூக்கம் வரவில்லை என்று குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

தற்போது சந்தானம் நடிப்பில் டிக்கிலோனா எனும் டைம் டிராவல் படமும், சபாபதி என்கிற திரைப்படமும், சர்வர் சுந்தரம் திரைப்படமும் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. இதனிடையே சந்தானம் நடித்த ஏ1 மற்றும் பாரீஸ் ஜெயராஜ் திரைப்படங்கள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி திரைப்படங்களாக வெளியாகி அதிக வரவேற்பை பெற்ற திரைப்படங்களாக அமைந்தன.

இது சந்தானம் STYLE..!! இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட FUNNY ரீல்ஸ்.. ஏன் தெரியுமா? VIDEO! வீடியோ

Tags : Santhanam

தொடர்புடைய இணைப்புகள்

Actor Santhanam Instagram reels viral video dikkilona

People looking for online information on Santhanam will find this news story useful.