சந்தானம் கலந்துகொண்ட 'டிக்கிலோனா' பட இயக்குநரின் தடபுடல் கல்யாணம்.. பிரபலங்கள் வாழ்த்துமழை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சந்தானம் நடித்த 'டிக்கிலோனா' திரைப்படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகிக்கும், வினி ஷாமுக்கும் நேற்று முன்தினம் திருச்சியில் திருமணம் நடந்தது.

நடிகர் சந்தானம், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ் மற்றும் பலர் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் டிக்கிலோனா. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்நிலையில், 'டிக்கிலோனா' திரைப்படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகிக்கும், வினி ஷாமுக்கும் நடந்த இந்த திருமணத்தில், நடிகர் சந்தானம் நேரில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார். நடிகர்கள் காளி வெங்கட், கண்ணன் ரவி (மண்டேலா பட நடிகர்), வத்ஸன் (எங்கேயும் எப்போதும்) ஆகியோரும் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். தவிர, நடிகர்கள் யோகி பாபு, சதீஷ், சாம்ஸ் ஆகியோர் இணையவழியில் புதுமணத் தம்பதியை வாழ்த்தினர்.

இதே போல், 'பலூன்' இயக்குநர் சினிஷ், 'எட்டு தோட்டாக்கள்' இயக்குநர் ஸ்ரீ கணேஷ், 'மண்டேலா' இயக்குநர் அஸ்வின், 'டோரா' இயக்குநர் தாஸ் ராமசாமி, 'தர்மபிரபு' இயக்குநர் முத்துக்குமார், 'ப்ரூஸ் லீ' இயக்குநர் பிரசாந்த், 'விழா' பட இயக்குநர் பாரதி பாலா, 'சொன்னா புரியாது' திரைப்பட இயக்குநர் ஜெயராஜ் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும், கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனர் கே.ஜே. ஆர் ராஜேஷ், கிளாப் போர்டு சத்யா மற்றும் டிக்கிலோனா திரைப்படத்தின் ஒட்டுமொத்த குழுவினரும் மணமக்களை வாழ்த்தினர். இந்த திரைப்படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் பிலிம் பேக்டரி இணைந்து தயாரித்துள்ளது.

நடிகர் சந்தானம் மூன்று விதமான கெட் அப்களில் நடிக்கும் திரைப்படம் 'டிக்கிலோனா'. டைம் டிராவலை மையப்படுத்தி நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில், 2027-ஆம் ஆண்டிலிருந்து 2020-ஆம் ஆண்டுக்கு வந்து தனது கல்யாணத்தை தடுத்து நிறுத்துவதற்காக சந்தானம், டைம் டிராவல் செய்வதை போல் 'டிக்கிலோனா' திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ALSO READ: "சிம்பு.. யுவன்.. காளிதாஸ் ஜெயராம்!".. புது காம்போவா இருக்கே? சம்பவம் Loading! விஷயம் என்ன தெரியுமா?

தொடர்புடைய இணைப்புகள்

Actor santhanam in dikkilona director marriage trending pic

People looking for online information on Dikkilona, Dikkilona director, Dikkilonamovie, Santhanam will find this news story useful.