நடிகர் சஞ்சீவ், விஜய் உடனான நண்பேன்டா மொமன்ட் பற்றி பதிவிட்டுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. இதை தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது நடிகரும் விஜய்யின் நெருங்கிய நண்பருமான சஞ்சீவ், விஜய்யுடனான ஃப்ரெண்ட்ஷிப் குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அண்மையில் விஜய் அனிந்திருந்தது போன்ற சட்டையை சஞ்சீவ் போட்டிருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் அடித்தது.
அதுகுறித்து பதிவிட்ட சஞ்சீவ், ''இந்த சட்டையை நண்பன் விஜய் எனக்கு வேலாயுதம் படத்தின் சமயத்தில் கொடுத்தார். 8 வருடங்களுக்கு பிறகும் எனக்கு பக்காவாக செட் ஆகிறது. நண்பேன்டா'' என பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு ரசிகர்களின் லைக்ஸ் குவிந்து வருகிறது.