அப்பாவும் மகளும் கொஞ்சி விளையாடும் வீடியோ.. இளம் நடிகரின் பதிவுக்கு குவியும் லைக்ஸ்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இளம் நடிகர் தனது மகளுடன் விளையாடும் வீடியோ இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது. 

விஜய் டிவியின் ராஜா ராணி தொடரில் நடித்தவர்கள் சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானஸா. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அண்மையில் ஆல்யா மானஸாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தங்களின் குழந்தைக்கு அய்லா என பெயர் சூட்டி மகிழ்ந்தனர் இருவரும்.

இந்நிலையில் நடிகர் சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகளுடன் கொஞ்சி விளையாடும் க்யூட் வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவுடன் அவர், ''நீ வளர்ந்து வருவதை பார்ப்பதே எனது மகிழ்ச்சி'' என பாசத்தோடு பதிவிட்டுள்ளார். இதையடுத்து இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதோடு, இணையத்தில் வைரல் அடித்து வருகிறது. 

 

தொடர்புடைய செய்திகள்

நடிகர் சஞ்சீவ் மகளுடன் வெளியிட்ட வீடியோ | actor sanjeev alya manasa's daughter video goes viral

People looking for online information on Alya Manasa, Alya Manasa Daughter, Sanjeev will find this news story useful.