முன்னணி ஹீரோவின் உடல்நிலை பற்றி வந்த தகவல்.. '' STAGE-4 கேன்சர் உறுதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னணி நடிகரின் உடல்நிலை குறித்து வந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சஞ்சய் தத். இவர் நடித்த பல படங்கள் ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்தன. மேலும் இவர் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். இவரின் வாழ்க்கையை தழுவி சஞ்சு என்ற படமும் உருவானது. இவர் தற்போது யஷ் நடித்து வரும் கே.ஜி.எஃப்-2வில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதனிடையே சில தினங்களுக்கு முன், நடிகர் சஞ்சய் தத் சுவாச கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றும் வரவில்லை என கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது அவருக்கு கேன்சர் நோய் வந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 

இதுகுறித்து அண்மையில் வெளியான தகவலில், நடிகர் சஞ்சய் தத்துக்கு Stage-4 Lung Cancer தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் அவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தற்போது சஞ்சய் தத் ட்ரீட்மென்ட்டுக்காக அமெரிக்கா செல்லவுள்ளாராம். இதை தொடர்ந்து அவர் குணமாகி வர வேண்டும் என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். 

 

தொடர்புடைய செய்திகள்

நடிகர் சஞ்சய் தத்துக்கு கேன்சர் | Actor Sanjay Dutt's Medical reports states of lung cancer

People looking for online information on Lung Cancer, Sanjay Dutt will find this news story useful.