AK61 படத்தில் இணைந்த பிரபல நடிகர்.. ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவுடன் வெளியான தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித் நடிக்கும் AK61 படத்தில் பிரபல முன்னணி நடிகர் இணைந்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | வைரலாகும் AK 61 படத்தின் BTS போட்டோ.. யார் யாரெல்லாம் இருக்காங்கனு பாருங்க!

நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் பூஜை கடந்த ஏப்ரல் 11 அன்று காலை 9.01 க்கு ஐத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த AK61 படத்திலும் நடித்து வருகிறார். நடிகர் வீராவும் AK61 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

முன்னதாக AK61 படத்திற்காக 47 நாட்கள் தொடர்ச்சியாக ஐத்ராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தி உள்ளனர்.

முதல் கட்ட படப்பிடிப்பு ஐத்ராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் 15ஆம் தேதி முதல்  துவங்கி உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நடிகர் சமுத்திரக்கனி, AK 61 படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். ரசிகருடன் சமுத்திரக்கனி படப்பிடிப்பு தளத்தில் எடுத்த BTS புகைப்படங்கள் மூலம் இது உறுதி ஆகியுள்ளது. நடிகர் அஜித் படத்தில் முதல்முறையாக சமுத்திரக்கனி நடிக்கிறார்.

இந்த படப்பிடிப்பில் அஜித் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

Also Read | NKP, ஜெய்பீம் வரிசையில் கார்கி.. சாய் பல்லவி நடிப்பில் வெளியான எமோஷனல் டிரெய்லர்!

தொடர்புடைய இணைப்புகள்

Actor Samuthirakani Joined AK 61 Movie Shooting

People looking for online information on Ajith Kumar, AK 61 Movie Shooting, Samuthirakani will find this news story useful.