"அஜித் சார் காட்டுற அன்பு இருக்கே".. நடிகர் சமுத்திரக்கனி நெகிழ்ச்சி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துணிவு படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி படம் குறித்த தனது அனுபவங்கள் மற்றும் நடிகர் அஜித் குமார் பற்றிய நினைவுகளை பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

Advertising
>
Advertising

Also Read | "அஜித் சார் Fans க்கு.. அந்த ஒரு சீன் போதும்".. 'துணிவு' பற்றி நடிகர் சமுத்திரக்கனி EXCLUSIVE..!

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு  நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம்  'துணிவு'.

இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன் இந்த  படத்திலும் நடித்துள்ளார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் இருவரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  துணிவு படத்தின் ஆடியோ உரிமத்தை ஜி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. துணிவு படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி நமது சேனலுக்கு பிரத்யேக நேர்காணல் ஒன்றை அளித்திருக்கிறார். அப்போது, நடிகர் அஜித் குமார் குறித்து பேசிய அவர்,"அஜித் சார் நெறய விஷயம் பத்தி பேசுவாரு. ஒரு பயணம் போயிட்டு வாங்கன்னு சொன்னாரு. மனிதம் பத்தியும், சமூகம் பத்தியும் அதிகமா பேசுவாரு. நம்ம வேலையா சரியா செஞ்சிட்டா போதும். மீதிய பிரபஞ்சம் பாத்துக்கும்னு சொல்லுவாரு. முதல் தடவை உன்னை சரணடைந்தேன் பாத்துட்டு வெங்கட் பிரபு கிட்ட என்ன பத்தி கேட்ருக்காரு. நான் சாரை நேர்ல சந்திச்சேன். ஒரு 15 நிமிஷம் பேசுனோம். அதுக்கு அப்புறம் துபாய் ஏர்போர்ட்ல மீட் பண்ணோம். அதுக்கு அப்புறம் துணிவு ஷூட்டிங்ல தான் பார்த்தோம். ஆனால் இவ்வளவு நாள் கழிச்சு பேசுற மாதிரியே இருக்காது. அவ்வளவு அன்பா பேசுவாரு" என்றார்.

துணிவு ஷூட்டிங் பற்றி சமுத்திரக்கனி பேசுகையில்," அஜித் சாரை பொறுத்தவரைக்கும் அடுத்தவங்க நடிக்கும் போது, அதை ரசிச்சு பார்ப்பாரு. நான் நடிக்கும்போது இப்படித்தான் வந்து நின்னு பார்த்தாரு. நீங்க போங்க சார்-னு சிரிச்சுகிட்டே சொன்னேன். நீங்க நடிங்கன்னு அங்கேயே இருந்து எல்லாத்தையும் கவனிச்சாரு" என்றார்.

Also Read | "சத்யராஜ் sir ஸ்டெப் இப்படித்தான்".. கத்துக்கொடுத்த அமுது.. Vibe ஆன விக்ரமன்.!

தொடர்புடைய இணைப்புகள்

Actor samuthirakani Exclusive about ajith kumar caring of co stars

People looking for online information on Ajith Kumar, Samuthirakani, Samuthirakani Exclusive, Thunivu will find this news story useful.