விஷாலுக்கு வில்லனான எஸ்.ஜே. சூர்யா! வெளிவந்த வேற மாரியான OFFICIAL அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Chennai: விஷால் நடிக்கும் 33-வது திரைப்படத்தில் விஷாலுக்கு வில்லனான எஸ்.ஜே. சூர்யா.

Advertising
>
Advertising

“வீரமே வாகை சூடும்“

நடிகர் விஷாலின் விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கி வரும்  திரைப்படம் “வீரமே வாகை சூடும்“ படத்தில் நடித்து முடித்துள்ளார். கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது. ஹைதராபாத்தின் பல பகுதிகளிலும்,  சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது. வரும் 2022 ஜனவரி குடியரசுத்தினத்தன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழு தற்போது திரையரங்குகளை உறுதி செய்யும் பணியினை செய்து வருகிறது. இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க,  டிம்பிள் ஹயாதி நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, RNR மனோகர்,  பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, KSG வெங்கடேஷ், மஹா காந்தி, மரியம் ஜார்ஜ், Black sheep தீப்தி முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

லத்தி

இந்த படத்தை தொடர்ந்து விஷால் நடிக்கும் 32வது திரைப்படம் லத்தி. நெருங்கிய நண்பர்களான ரமணா, நந்தா இருவரும் இணைந்து ராணா புரொடக்‌ஷன்ஸ் என்ற பெயரில் பட நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து லத்தி படத்தை தயாரிக்கிறது. A. வினோத்குமர் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். அவரே கதை, திரைக்கதை எழுதுகிறார். சாம் CS இப்படத்திற்கு இசையமைக்கிறார், பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார். A.வினோத்குமார் & பொன்பார்த்திபன் வசனம் எழுதுகிறார்கள். சுனைனா கதாநாயகியாக நடிக்கிறார்.

விஷால்33

இந்த படத்தை தொடர்ந்து விஷால் நடிக்கும் 33-வது திரைப்படத்தைப்  இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப்போகும் அறிவிப்பை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ட்விட்டர் பக்கத்தில் சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பான் இந்திய படமாக உருவாக உள்ளதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஆதிக் அறிவித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 2002 ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்றும், இதர படக்குழுவினருடைய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் S J சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் S J சூர்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Actor S J Surya doing the villain Role in Vishal 33 Movie

People looking for online information on Aadvik Ravichandran, ஆதிக் ரவிச்சந்திரன், S J சூர்யா, Sj suriyah, Vishal will find this news story useful.