நடிகர் RK சுரேஷ் மனைவியின் வளைகாப்பு.. நேரில் வாழ்த்திய சினிமா & அரசியல் பிரபலங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் வினியோகஸ்தராகவும் நடிகராகவும் வலம் வரும் ஆர் கே சுரேஷ்.

Advertising
>
Advertising

Also Read | மெக்காவுக்கு புனித பயணம் செய்த நடிகை மும்தாஜ்.. கண்ணீர் மல்க இறை வழிபாடு!

இயக்குனர் பாலா இயக்கிய ‘தாரை தப்பட்டை’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் மருது படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். சமீபத்தில் ‘ஜோசப்’  மலையாள படத்தின் தமிழ் ரீமேக் விசித்திரன் படத்தில் நடித்திருந்தார். 

விஜய் ஆண்டனி நடித்த சலீம், விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை ஆகிய படங்களை தயாரித்துள்ளார். பரதேசி, சூது கவ்வும், தங்க மீன்கள், மதயானை கூட்டம், லைகர், மாமனிதன் ஆகிய படங்களை வினியோகம் செய்துள்ளார்.

நடிகராக ஆர்கே சுரேஷ் நடித்த ’விசித்திரன்’ ‘விருமன்’ மற்றும் ’பட்டத்து அரசன்’ ஆகிய படங்கள் இந்த ஆண்டு வெளியாகி உள்ளன. ஆர் கே. சுரேஷ், பாரதிய ஜனதா கட்சியின் பிற்படுத்தப்பட்ட பிரிவின் துணை தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

இச்சூழலில் ஆர்கே சுரேஷின் மனைவி மதுவின் வளைகாப்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி, எர்னாவூர் நாராயணன், அர்ஜூன் சம்பத், திருமாறன் ஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்ச்சிக்கு  இயக்குனர் ஷங்கரின் மனைவி ஈஸ்வரி, இயக்குனர் மிஷ்கின், நடிகர் கௌதம் கார்த்திக், நடிகர் விமல், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஆர்கே சுரேஷ் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

Also Read | RIP: "பஞ்ச தந்திரம்" படப்புகழ் நடிகர் கைகாலா சத்திய நாராயணா மரணம்.. சோகத்தில் திரையுலகம்

நடிகர் RK சுரேஷ் மனைவியின் வளைகாப்பு.. நேரில் வாழ்த்திய சினிமா & அரசியல் பிரபலங்கள்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actor RK Suresh wife Madhu Baby Shower Function

People looking for online information on RK Suresh, RK Suresh wife Madhu, RK Suresh wife Madhu Baby Shower Function will find this news story useful.