ரியோ பற்றி அவரது மனைவி ஷேர் செய்த தகவல்.. பிக்பாஸ்-ல் ரியோ எப்படி..?! - DETAIL-ஆ சொல்லிருக்காங்க

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ரியோராஜ் குறித்து அவரது மனைவி இன்ஸ்டாகிராமில் ஒரு விஷயத்தை ஷேர் செய்துள்ளார்.

தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமானவர் ரியோ ராஜ். இதை தொடர்ந்து இவர் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவர் ஷ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதனிடையே தற்போது பிக்பாஸ் போட்டியில் நடிகர் ரியோ ராஜ் கலந்து கொண்டுள்ளார். இதில் இவரது நகைச்சுவையான பேச்சு ரசிகர்களை கவர்ந்துள்ளது. பிக்பாஸ் வீட்டில் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவருக்காக ரியோ ஆர்மியும் உருவாகியுள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் ரியோ எப்படி என அவரது மனைவி ஒரு பதிவை ஷேர் செய்துள்ளார். ''யாரை பற்றியும் வதந்திகள் பேசி கொண்டிருப்பதில்லை. யாருக்காவது கஷ்டம் என்று வந்தால் உடனே வருவது, மறைமுக வேலைகள் செய்யாமல் முகத்துக்கே நேரே பேசுவது.. குட் ஜாப் ரியோ. ஒரு கேப்டனாக நீங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளீர்கள்'' என்ற் சமூக வலைதளத்தில் பார்வையாளர் ஒருவரின் பதிவை ரியோவின் மனைவி ஷேர் செய்துள்ளார்.

இதை தொடர்ந்து ரசிகர்களும், அவர்களின் பார்வையை கமன்ட்ஸாக கொடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

ரியோ ராஜ் பற்றி மனைவி பதிவு | Actor rio raj's wife shruthi post about him on biggboss tamil 4

People looking for online information on BiggBoss Tamil 4, Rio Raj, Rio Raj Wife will find this news story useful.