WOW இவ்வளவு சீக்கிரமா?..... நடிகர் ராணா திருமண தேதி அறிவிப்பு?....வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் பாகுபலி நடிகர் ராணா. இவர் சமீபத்தில் ஆர்க்கிடெக்ட் மிஹீக்கா பஜாஜ் என்பவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். இந்நிலையில் அவர்களது திருமணம் எப்போது நடக்கும் என்று ரசிகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்களும் ஆவலாக உள்ளனர்.

Advertising
Advertising

இந்நிலையில் திருமண தேதி முடிவு செய்யப்பட்டுவிட்டதாக செய்திகள் உலா வர ஆரம்பித்துள்ளன. விசாரித்ததில் ராணாவுக்கு மிகவும் நெருக்கமான தொடர்புகள் கூறும்போது "ஆம். வரும் ஆகஸ்ட் 8 அல்லது 18-ஆம் தேதி அவரது திருமணம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என 50 பேர் மட்டும் பங்குகொள்ளும் வகையில் நடக்கும்" என்று கூறியுள்ளனர்.

தமிழில் பாகுபலி படத்தில் ராணா நடித்த வில்லன் கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இவர் பிரபு சாலமன் இயக்கத்தில் காடன் படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் ராணா திருமண தேதி அறிவிப்பா குஷியில் ரசிகர்கள் Actor Rana marriage may take place during this date

People looking for online information on Marriage, Rana Daggubati will find this news story useful.