லாக்டவுனால் சிரமத்திலிருந்த ஊழியர்களுக்கு 3 மாத சம்பளத்தை முன் பணமாக கொடுத்த நடிகர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டார்லிங் - 2' விதிமதி  உல்டா போன்ற படங்களை தனது ரைட் மீடியா ஒர்க்ஸ் நிறுவத்தின் மூலம் தயாரித்து கதாநாயகனாக நடித்தவர் ரமீஸ் ராஜா இவர் தன்னுடைய நிறுவனத்தில்( ரைட் ரூப் & அல்லய்டு புரொடக்ட்ஸ் (பி) லிமிடெட்) பணியாற்றிக் கொண்டிருக்கும் 100 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு இந்த லாக்டவுன் சூழ்நிலையில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் அவர்களுக்கு உதவுகின்ற வகையில் 3 மாத சம்பளத்தை  முன்பாகவே கொடுத்து உதவியுள்ளார்.

இவர் நடித்தடார் லிங் - 2 படத்தை கிரீன் ஸ்டுடியோ வெளியிட்டது இதில் இவருக்கு மாயா என்ற நடிகை கதாநாயகியாக நடித்தார். மற்றும் கலையரசன், காளி வெங்கட், சதீஷ் முனீஸ்காந்த்,மற்றும் பலர் நடித்துள்ளனர்.சதீஷ் சந்திரசேகரன் படத்தை இயக்கினார்.

அடுத்து விதிமதி உல்டா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் ரமீஸ். ஜனனி ஐயர் ஜோடியாக நடித்தார். வில்லனாக டேனியல் பாலாஜி கருணாகரன் சித்ரா லட்சுமணன், சென்ராயன் ஆகியோர் நடித்திருந்தனர். A .R. முருகதாஸின் உதவியாளர் விஜய் பாலாஜி இப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor Ramiez raja pays three months salary in advance to staff

People looking for online information on Lockdown, Ramiez Raja will find this news story useful.