ரஜினிகாந்த்-ன் திருமண மண்டப வரி விவகாரம்... உயர்நீதிமன்றத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ரஜினிகாந்தின் ராகவேந்திரா மண்டபம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள தனது ராகவேந்திர திருமண மண்டபத்தின் சொத்து வரி விவகாரத்தில், வரி விலக்கு கோரி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று நிதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதி, மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பிய 10 நாட்களில் வழக்கு தொடர்ந்து, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாக கண்டனம் தெரிவித்தார். இதை தொடர்ந்து, அபராதம் விதித்து, வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து ரஜினிகாந்த் தரப்பில், வழக்கை திரும்ப பெறுவதற்கான அனுமதி கேட்கப்பட, நீதிபதி அதற்கு அனுமதி அளித்துள்ளார். 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

உயர்நீதிமன்றத்தில் ரஜினி முடிவு | Actor rajinikanth's decision in highcourt regarding ragavendra mandapam

People looking for online information on Highcourt, Ragavendra Kalyana Mandapam, Rajinikanth will find this news story useful.