ரஜினியின் அரசியல் என்ட்ரி.. முதல் கட்டமாக அடித்த பெங்களூர் விசிட் - காரணம் இதுதான்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ரஜினி அரசியல் செயல்பாடுகளில் முதலாவதாக பெங்களூர் சென்றுள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் ரஜினி. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். மேலும் அண்மையில் ரஜினி அரசியல் வருகை குறித்து அறிவித்தார். 

டிசம்பர் 31-ல் தேதி அறிவிக்கப்படும் என்றும், ஜனவரியில் கட்சி துவங்கப்படும் என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். மேலும் பத்திரிக்கையாளர்களையும் சந்தித்து அவர் அரசியல் வருகையை உறுதி செய்தார். 

இந்நிலையில் தற்போது ரஜினி சென்னையில் இருந்து பெங்களூர் சென்றுள்ளார். பெங்களூர் சென்ற அவர், அங்கு வசிக்கும் அவரது அண்ணன் சத்ய நாராயணாவை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். 

அரசியல் என்ட்ரியை அறிவித்தவுடன், முதல்கட்டமாக தனது அண்ணனை சந்தித்து ரஜினிகாந்த் ஆசி பெற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

நடிகர் ரஜினி அரசியல் செயல்பாடு | actor rajinikanth next move after announcing political entry

People looking for online information on Rajini Makkal Mandram, Rajini Political Entry, Rajinikanth will find this news story useful.