நடிகர் ரகுமானின் மகள்களா இவங்க? இப்படி வளந்துட்டாங்களே!! வைரல் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எண்பதுகளில் அனைவரையும் கவர்ந்த இளம் நடிகராக தமது வசீகர தோற்றத்தால் கவனம் ஈர்த்தவர் நடிகர் ரகுமான்.

actor rahman birthday celebration his daughters unseen pics

புதுப்புது அர்த்தங்கள் திரைப்படம் தொடங்கி பல எதார்த்த டிராமா வகையறா படங்களிலும், இன்றுவரை அனைவராலும் விரும்பப் படும் கிளாசிக் 80ஸ் படங்களிலும் நடித்த ரகுமான் அவ்வப்போது நிறைய படங்களில் நடித்து வந்தாலும் அமீர் இயக்கத்தில் ஜீவா நடித்து உருவான ராம் திரைப்படத்தின் மூலம் ஒரு மாஸ் ரீ எண்ட்ரியை அழுத்தமாக பதித்தார்.

actor rahman birthday celebration his daughters unseen pics

இதனைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் ரகுமான் மீண்டும் கலக்க தொடங்கினார். சூர்யா நடிப்பில் உருவான சிங்கம் பட வரிசையிலும் இணைந்த ரகுமான் அடுத்தடுத்து பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தான் அண்மையில் ரகுமான் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

இதுபற்றி தமது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ள ரகுமான் மனைவி, மகள்களுடன் தன் பிறந்த நாளை கொண்டாடும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவுகளில் அனைவருக்கும் நன்றி சொன்னதுடன், ஃபேமிலி மேன் என கேப்ஷனையும் குறிப்பிட்டுள்ளார். ரகுமானின் இந்த புகைப்பட பதிவுகளை பார்த்த பலரும் அட, நம்ம ரகுமானின் மகள்கள் அதற்குள் இப்படி வளர்ந்துவிட்டார்களே என ஆச்சரியத்தில் திளைத்துள்ளனர்.

ALSO READ: தனுஷின் 'ஜகமே தந்திரம்' பட ஹாலிவுட் நடிகர் என்ன சொல்லிருக்காரு பாருங்க!.. தீயாய் பரவும் ட்வீட்!

Tags : Rahman

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor rahman birthday celebration his daughters unseen pics

People looking for online information on Rahman will find this news story useful.