'தல' அஜித் பாணியில் களத்தில் இறங்கிய 'ரஹ்மான்'.. என்ன பண்ணிருக்கார் பாருங்க.. VIRAL ஆகும் PHOTOS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் தல அஜித் சைக்கிளிங் செய்வதில் ஆர்வமுடையவர். அவரை போலவே நடிகர் ரஹ்மானும் தற்போது சைக்கிளிங் செய்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அடிப்படையில் பைக் ரேஸ், கார் ரேஸ் உள்ளிட்டவற்றில் தீவிர ஆர்வம் உடைய அஜித், அவற்றில் கலக்குவார். தற்போது எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்திருக்கும் வலிமை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் அஜித் செம மாஸாகவும், ஸ்டைலாகவும் பைக்கர் உடையணிந்து கொண்டு தோன்றியிருந்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே மாஸ் கிளப்பின.

முன்னதாக நடிகர் அஜித் தன்னுடைய நண்பர்களுடன் சைக்கிளில் சென்ற புகைப்படங்கள் வைரலாகி வந்தன. இந்த நிலையில் பிரபல நடிகர் ரஹ்மான் தல அஜித் பாணியில் சைக்கிளிங் சென்றிருக்கிறார்.

பல வருடங்களாக சைக்கிளிங் செய்து வருபவர் நடிகர் ரஹ்மான். கடந்த ஞாயிறு அன்று, 6 நண்பர்களுடன் 110 km சென்னை டூ பாண்டிசேரி நோக்கி சைக்கிளிங் செய்தார்.  இதுகுறித்து பேசிய அவர், “அடுத்த தடவை 150 km சைக்கிளிங் செய்வேன்” என்றார்.

80-களில் புகழ்பெற்ற திரைப்பட நடிகர் ரஹ்மான் கே.பாலச்சந்தர் இயக்கிய புதுப்புது அர்த்தங்கள் திரைப்படம் மூலம் முத்திரை பதித்தார். தொடர்ந்து பல படத்தில் நடித்து வந்த ரஹ்மான் நீண்ட வருட இடைவெளிக்குப் பிறகு அமீர் இயக்கத்தில் வெளியான ராம் திரைப்படத்தில் நடித்தார்.

அதன் பின்னர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும், சிங்கம் 2-ஆம் பாகம் படத்தில் வில்லனாகவும் நடித்து இருந்தார்.  முன்னதாக தனது மனைவி மற்றும் மகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய  புகைப்படங்களை ரஹ்மான் பதிவிட்டிருந்தார்.

இதேபோல் அண்மையில் தான் தனது தாயாரை பிரிந்து சோகத்தில் இருந்த ரஹ்மான், தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார்.

ALSO READ: 'அல்லு அர்ஜூன்' எடுத்துள்ள 'சல்யூட்' அடிக்கவைக்கும் 'செயல்'! ரசிகர்களிடம் வேண்டுகோள்!

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor rahman also cycling following thala ajith viral pics

People looking for online information on Ajith Kumar, Rahman will find this news story useful.