100 மூட்டை அரிசி அனுப்பிய ரஜினி..! - இந்த புதிய முயற்சிக்கு கை கொடுங்கள் - லாரன்ஸ் வேண்டுகோள்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ராகவா லாரன்ஸ் மக்களுக்கு உதவி செய்யும் தனது புதிய முயற்சியில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, வேலைக்கு செல்ல முடியாமல், பலர் உணவுக்கே கஷ்டப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பலர் தங்களால் முடிந்த உதவியை முடியாதவர்களுக்கு செய்து வருகின்றனர். இதில் நடிகர் லாரன்ஸ் செய்து வரும் உதவிகள் குறிப்பிடத்தக்கது. கொரோனா நிவாரண நிதியாக 3 கோடி அளித்த அவர், தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களை முடிந்தளவில் அளித்து வருகிறார். 

இந்நிலையில் நடிகர் லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ''இந்த கஷ்டமான சூழ்நிலையில் பலர் உதவி கேட்டு என்னை தொடர்பு கொண்டு வருகின்றனர். அவர்கள் கேட்பது பணம் அல்ல, உணவுக்கு தேவையான பொருட்கள் மட்டுமே. என்னால் முடிந்தளவு நானும் உதவிகள் செய்து வருகிறேன். என் ஒருவனால் மட்டுமே அனைவருக்கு உதவி செய்திட முடியாது. இதுகுறித்து என் தம்பியிடம் பேசிய போது, இந்த முயற்சியில் இன்னும் பலரை சேர அழைக்கலாம் என கூறினார். இதுகுறித்து நடிகர் ரஜினியிடம் பேச, அவர் 100 மூட்டை அரிசிகளை அனுப்பி வைத்தார். இதையடுத்து இந்த முயற்சியில் கை கோர்க்க நான் அழைப்பு விடுக்கிறேன். நடிகர்கள் கமல், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்களும் அவர்களின் ரசிகர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என உதவ விருப்பமிருப்பவர்கள் அனைவரும், இந்த முயற்சியில் இணையுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்'' என அவர் தெரிவித்துள்ளார். 

நாங்கள் நிதி கேட்கவில்லை, அத்தியாவசிய உணவு பொருட்கள் மட்டுமே போதும். அதை அனுப்பி வைத்தால், நாங்கள் உரியவர்களிடம் சேர்க்கும் வேலையை பார்த்து கொள்கிறோம். இதையடுத்து உதவி செய்ய விரும்புகிறவர்கள், ''Lawrence Charitable Trust, No 2/4, 1st Cross Street, 3rd Avenue, Ashok Nagar, Chennai - 600 083. Contact - 8778338209' என்ற முகவரிக்கும் பொருட்களை அனுப்பி வைக்கலாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

நடிகர் ராகவா லாரன்ஸ் உதவிக்கு அழைக்கிறார் | actor raghava lawrence asks top tamil heroes to join in his corona relief service

People looking for online information on Corona relief fund, Raghava Lawrence, Rajinikanth will find this news story useful.