1 கோடி ரூபாய் செட்டில் லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் படத்தின் REMIX SONG ஷூட்டிங்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பல வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தயாரித்து இயக்கும் “ருத்ரன்” படத்தில் ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர்  நடிக்கின்றனர்.

கே.பி.திருமாறன் கதை, திரைக்கதை எழுதுகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பில்லா 2, மாஸ், காக்க காக்க படங்களின் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.

படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே பலரின் கவனத்தை ஈர்த்த இப்படத்தின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டும் வகையில் வீரத்திருமகன் படத்தில் இடம்பெற்ற பிரபல பாடலான ‘பாடாத பாட்டெல்லாம்’ பாடலை  ரீமிக்ஸ் செய்துள்ளனர். ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட்டில் இப்பாடலின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டுள்ளது. இப்பாடலுக்கு நடன இயக்குனராக ஶ்ரீதர் பணியாற்றியுள்ளார்.

“ருத்ரன்” படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ஏப்ரல் 14, 2022 தமிழ் புத்தாண்டிற்கு வெளியாக உள்ளது. இதை படக்குழு அதிகாரப்ப்பூர்வமாக ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர்கள்

ராகவா லாரன்ஸ்
பிரியா பவானி சங்கர்
நாசர்
பூர்ணிமா பாக்யராஜ்

தொழில் நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு -  5 Star கிரியேஷன்ஸ்
இசை - G.V.பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு - R.D.ராஜசேகர்
மக்கள் தொடர்பு - சதீஷ் (AIM)
கதை, திரைக்கதை - K.P.திருமாறன்
இயக்கம் - 5 ஸ்டார் S.கதிரேசன்

தொடர்புடைய இணைப்புகள்

Actor raghava lawrance priya bhavani shankar new movie update

People looking for online information on Priya Bhavani Shankar, Raghava Lawrance will find this news story useful.