காந்தாரா பஞ்சுருளி கெட்டப்பில்.. விஜய் டிவி பிரபலம்.. வைரலாகும் மேக்கப் வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி பிரபலம் நடிகர் புகழ் காந்தாரா திரைப்படத்தின் கெட்டப் அணியும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

                      Images are subject to © copyright to their respective owners.

கன்னட மொழியில் உருவாகிய திரைப்படமான 'காந்தாரா' கடந்தாண்டு செப்டம்பர் 30 அன்று கன்னட மொழியில் வெளியானது. காந்தாரா படம், விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து நல்ல  விமர்சனங்களைப் பெற்றது. இதனால், கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் படத்தின் வசூல் அதிகரித்தது. இதே தலைப்புடன் இந்தப் படத்தின் தமிழ் பதிப்பு தமிழ்நாட்டிலும் வெளியானது. இந்த படம் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது.

Images are subject to © copyright to their respective owners.

கேஜிஎஃப் புகழ் ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில், ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, நடித்துள்ள இந்தப் படம் திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் தற்போது பிரபல அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி  வருகிறது.

Image Credit : Pugazh | Instagram 

இந்நிலையில் விஜய் டிவி பிரபலமான நடிகர் புகழ் காந்தாரா திரைப்படத்தில் வரும் பஞ்சுருளி தெய்யம் கலைஞர்கள் போலவே வேடமிட்டு இருக்கிறார். இந்த வீடியோவை அவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

Image Credit : Pugazh | Instagram

அந்த பதிவில்,"இந்த கெட்டப் போடவே எனக்கு 4 மணி நேரம் ஆச்சு. மாபெரும் வெற்றியை இந்த படம் அடைய இதில் உள்ள வேலைப்பாடுகளும் ஒரு காரணம்னு இப்பத்தான் புரியுது. மிகப்பெரிய கலைநயத்தோடு எனக்கு மேக்கப் போட்டு கொடுத்த மேக்கப் மேனுக்கு நன்றி. இந்த படத்தின் மூலம் மக்களை வியந்து பார்க்க வைத்தவர் ரிஷப் ஷெட்டி. அதிலிருந்து ஒரு சிறு துளியை மக்களிடம் கொண்டு சேர்த்து இருக்கேன்னு நினைக்கும் போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.. அனைத்து பஞ்சுருளி தெய்யம் நடன கலைஞர்களுக்கும்...என் உயர்வுக்கு ஏணியாய் இருந்து எனக்கு ஆதரவு அளித்து வரும் என்னுயிர் ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Actor Pugazh in Kanthara makeup Video Goes Viral

People looking for online information on Kanthara, Pugazh, Vijay tv will find this news story useful.