பெங்களூரு: திருமண செய்வதாக கூறி சக நடிகையை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கன்னட திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
OFFICIAL: நயன்தாரா மலையாளத்தில் நடிக்கும் புதிய படத்தில் இணைந்த பிரேமம் பட பிரபலம்! அடிப்பொலி
தயாரிப்பாளர் நடிகர் ஹர்ஷவர்தன் என்ற விஜய பார்கவ் -வை கர்நாடக போலீசார் கடந்த சனிக்கிழமை கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட விஜய பார்கவ் ‘விஷன் 2023’ என்ற கன்னட திரைப்படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட விஜய் பார்கவ் உடன் இரண்டு ஆண்டுகளாக காதலில் இருந்ததாக புகார் அளித்த நடிகை காவல் நிலையத்தில் கூறியுள்ளார். திருமணம் செய்வதாக உறுதியளித்து இரண்டு ஆண்டுகளாக தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் நடிகை கூறி உள்ளார்.
கடந்த சில தினங்களாக நடிகையுடன் பேசுவதை ஹர்ஷவர்தன் தவிர்த்து வந்ததாகவும், மேலும் நடிகை திருமணத்திற்கு வலியுறுத்திய போது, தயாரிப்பாளர் விஜய பார்கவ் நடிகையை பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று கொலை மிரட்டல் விட்டதாகவும் நடிகை புகாரில் கூறியுள்ளார். இது தொடர்பாக நடிகை அன்னபூர்ணேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
விஜய் பார்கவ் மீது IPC பிரிவுகள் 417 (ஏமாற்றுதல்), 376 (கற்பழிப்பு), 504 (வேண்டுமென்றே அவமதித்தல் மற்றும் தூண்டுதல்), 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். டிஜிட்டல், பொருள் மற்றும் உடலியல் ஆதாரங்களை போலீசார் சேகரித்துள்ளனர். பாதிக்கப்பட்ட நடிகை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட தயாரிப்பாளர் விஜய பார்கவ் நீதிமன்ற காவலுக்கு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
அடேங்கப்பா.. ரஜினிக்கும் விஜய்க்கும் இப்படி ஒரு ஒற்றுமை இருக்கா? செம்ம!