பிரபல ஹீரோவுக்கு கொரோனா வைரஸ் உறுதி.. படப்பிடிப்புக்கு பிறகு அவரே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகர் தனது கொரோனா வைரஸ் பரிசோதனை பாசிட்டீவாக வந்திருப்பது குறித்து பதிவிட்டுள்ளார். 

மலையாள சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் பிருத்விராஜ். இவர் தமிழிலும் மொழி, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான அய்யப்பனும் கோஷியும் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் தற்போது பிருத்விராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ்க்கான தகுந்த பாதுகாப்போடு அவர் 'ஜன கன மன' எனும் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். ஆனால், இறுதிநாள் படப்பிடிப்பிற்கு பிறகு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் பாசிட்டீவ் என வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, இப்போது பிருத்விராஜ் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறாராம். 

 

தொடர்புடைய இணைப்புகள்

பிருத்விராஜ் அதிர்ச்சி தகவல் | Actor prithviraj's latest post of covid test turns fans shocking

People looking for online information on Covid 19, Prithviraj will find this news story useful.