நடிகர் பிருத்விராஜ் சமீபத்தில் தனது டிரைவிங் லைசென்ஸ் படம் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தளபதி விஜய் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது பேசிய அவர், ''விஜய் சாரை சந்தித்து பேசியிருக்கிறேன். அவர் இந்தியாவிலேயே பெரிய ஸ்டார்களில் ஒருவர். நான் சொல்றது தமிழ் நாட்டில் மட்டும் அல்ல. ஒவ்வொரு முறையும் விஜய் சார் படங்கள் வெளியாகும் போது தமிழ் சினிமாவில் இவ்வளவு மதிப்பு உயர்ந்து வருகிறது.
தமிழ் கமர்ஷியல் சினிமாவில் அவர் ஒரு சூப்பர் ஸ்டார். கடந்த சில வருடங்களாக ஒரு ஸ்டாராகவும் நடிகராகவும் அவரது மதிப்பு உயர்ந்து கொண்டே போகிறது. அவர் படங்களை மிகவும் குறைவாகவும், சிறப்பான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து மட்டுமே நடிக்கிறார்.
அவரை நேரில் பார்க்கும் போது ஒரு ஸ்டார் கரிஸ்மா அவரிடம் இருக்கும். அவரிடம் அமிதாப் பச்சன் போல் சூப்பர் ஸ்டார் கரிஸ்மா இருக்கிறது. நாமெல்லாம் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன வென்றால் என்ன தான் திறமையிருந்தாலும் கடின உழைப்பு மிக முக்கியம் என்று தான். என்று தெரிவித்தார்.