"ஷூட்டிங் ஸ்பாட்ல அஜித் SIR எனக்காக அவ்வளவு நேரம் WAIT பண்ணாரு".. .. நடிகர் பிரேம் நெகிழ்ச்சி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துணிவு படத்தில் நடந்திருக்கும் பிரேம் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.

Actor Prem Exclusive about Thunivu shooting spot events
Advertising
>
Advertising

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு  நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம்  'துணிவு'.

இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.

Actor Prem Exclusive about Thunivu shooting spot events

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன் இந்த  படத்திலும் நடித்துள்ளார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் இருவரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  துணிவு படத்தின் ஆடியோ உரிமத்தை ஜி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் துணிவு படத்தின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த துணிவு படத்தின் டிரெய்லர் முன்னர் அறிவிக்கப்பட்டது போலவே நேற்று மாலை 7 மணிக்கு வெளியிடப்பட்டது. ஆக்ஷன் காட்சிகளும் அனல் பறக்கும் வசனங்களும் நிறைந்த இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில், துணிவு படத்தில் நடித்திருக்கும் பிரேம் நமது Behindwoods சேனலுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்திருக்கிறார். அப்போது நடிகர் அஜித் பற்றி பேசிய அவர்,"ஒருநாள் ஹைதராபாத்-ல ஷூட்டிங்ல நானும் அஜித் சாரும் பேசிட்டு இருந்தோம். என் மனைவி ஹைதராபாத் வராங்க-னு சொல்லிட்டு இருந்தேன். அப்போ, எனக்கு போன் கால் வந்துச்சு. என் மனைவி பேசுனாங்க. திடீர்னு போனை வாங்கி அஜித் சார் பேசுனாரு. என் மனைவி ஷாக் ஆகிட்டாங்க. அப்போ, நாளைக்கு வாங்க மீட் பண்ணுவோம்-னு போன்-ல அஜித் சார் சொன்னாரு. "

"அடுத்தநாள், அவருக்கு 12 மணிக்கு எல்லாம் சூட்டிங் முடிஞ்சது. எனக்கு 5 மணி வரை ஷாட் இருந்துச்சு. நீங்க கிளம்புங்க சார்-னு சொன்னேன். ஆனா வெயிட் பண்றேன்னு சொல்லிட்டாரு. அதுக்கு அப்புறம் என் மனைவி வந்தாங்க. அவங்க கிட்ட நெறய விஷயம் குறித்து பேசுனாரு. முக்கியமா பிரியாணி செய்யுறது எப்படின்னு சொல்லிக்கொடுத்தாரு. அவர் செய்யுற சிக்கன் ரெசிப்பி பத்தி சொன்னாரு. கிளம்பும்போது அவரே வந்து, கதவை திறந்து வழியனுப்பி வச்சாரு. அவரை மாதிரி எல்லாம் சான்ஸே இல்ல. அந்த 15 நாளும் நான் மகிழ்ச்சியா இருந்தேன்" என்றார்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Actor Prem Exclusive about Thunivu shooting spot events

People looking for online information on Ajithkumar, Prem, Thunivu will find this news story useful.