தமிழ் கடவுள் முருகனை பற்றியும், கந்த சஷ்டி கவசத்தைப் பற்றியும் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் அவதூறு பேசியதாக இரண்டு நாட்களாக கடும் சர்ச்சையானது. அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் இந்த விவகாரங்கள் குறித்து கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நடிகர் பிரசன்னா Behindwoods Air சேனலுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பொதுவா நான் பேசவே விரும்பமாட்டேன். நான் இந்த அளவுக்கு பேசுகிறேன் என்றால் என்னை அது அந்த அளவுக்கு காயப்படுத்தியிருக்கிறது. கோபப்படுத்தியிருக்கிறது.
அது எனக்கு வருத்தமாக இருந்தது. வீடியோ போட்டவங்களுக்கு சொல்லிக்கிறேன். மத பிரச்சாரம் எவ்ளோ தூரம் பண்றாங்களோ, அதே மாதிரி உங்கள் கொள்கைகளையும் சொல்லுங்க. எடுத்துக் கொள்கிறவர்கள் எடுத்துக்கொள்ளட்டும். அவங்க தொண்டையை கிழித்து உள்ள திணிக்க முயற்சி பண்ணாதிங்க. அசிங்கப்படுத்தாதிங்க.
கடவுள் மறுப்பு கட்சியிலிருந்து கொண்டு கோவில் போகிறவர் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். அவர்கள் உங்கள் கோட்பாட்டையும் ஒப்புக்கொள்கிறான். அதே நேரம் வழியா வழியாக அவர் முன்னோர்கள் கடைபிடித்து வந்த நம்பிக்கையையும் தொடர்கிறார். அவரையும் சேர்த்து காயப்படுத்துகிறீர்கள்'' என்றார்.