இரட்டைக் குழந்தையை பெற்றெடுத்த பாப்புலர் டிவி ஜோடி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சின்னத்திரையில் பிரபல ஜோடியான பிரஜின் மற்றும் சாண்ட்ரா தம்பதிக்கு அழகான இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.

Actor Prajin and Santra blessed with Twin babies

‘காதலிக்க நேரமில்லை’ என்ற சீரியல் மூலம் இளசுகள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் பிரஜின். அதைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்த இவர் தற்போது ‘சின்னத்தம்பி’ சீரியலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பிரஜினின் மனைவி சாண்ட்ரா சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதாக பிரஜின் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதையடுத்து, தற்போது பிரஜின் - சாண்ட்ரா தம்பதிக்கு அழகான இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.

இது தொடர்பான தகவலையும் பிரஜின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இரு குழந்தைகளின் பிஞ்சு கால்களில் பிரஜின், சாண்ட்ரா என்ற பெயர் கொண்ட மோதிரங்களை அணிவித்து அதனை புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளார்.

Tags : Prajin, Santra

மற்ற செய்திகள்

Actor Prajin and Santra blessed with Twin babies

People looking for online information on Prajin, Santra will find this news story useful.