"இது நல்லாருக்கே.!" - வெளியானது பிரபுதேவாவின் அடுத்த பட டைட்டில்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடன மாஸ்டராக திரைத்துறையில் தன்னுடைய பயணத்தை தொடங்கிய பிரபுதேவா, பல்வேறு முன்னணி நடிகர்களின் மற்றும் இயக்குனர்களின் திரைப்படங்களில் நடனம் அமைத்திருக்கிறார்.

Actor Prabhu Deva next film title Dont Dare Compare
Advertising
>
Advertising

இன்றும் ட்ரெண்டிங் திரைப்படங்களுக்கு ட்ரெண்டிங் ஆன நடன அமைப்புகளை அமைத்த வண்ணம் இருக்கும் பிரபுதேவா, முன்னணி இயக்குனர்களின் திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தும் இருக்கிறார்.

Actor Prabhu Deva next film title Dont Dare Compare

இயக்குனராகவும் முன்னணி நடிகர்களை வைத்து இயக்கியிருக்கும் பிரபுதேவா, அண்மைக் காலங்களாகவே தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். பிரபு தேவா நடிப்பில் முன்னதாக பொன் மாணிக்கவேல் திரைப்படம் ரிலீஸ் ஆனது.

இதனை தொடர்ந்து மிக அண்மையில் இயக்குனர் என்.ராகவன் இயக்கத்தில் மை டியர் பூதம் திரைப்படம் வெளியாகி இருந்தது. இதில் நடிகர் பிரபுதேவா முற்றிலும் புதிதாக மாறுபட்ட கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.

அதாவது குழந்தைகளுக்கு பிடித்த பூதமாக நடித்திருந்தார். இதேபோல் கடந்த வாரம் பிரபு தேவா நடிப்பில் பொய்க்கால் குதிரை திரைப்படம் வெளியானது. இதில் ஒற்றைக் காலால் நடனமாடி அசத்தியிருக்கிறார் பிரபு தேவா.

தொடர்ந்து பகிரா, உள்ளிட்ட திரைப்படங்கள் பிரபுதேவா நடிப்பில் வெளியாக இருக்கின்றன. இந்த நிலையில் தான் பிரபுதேவா நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் தொடர்பான தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி பிரபுதேவா நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு, ‘Dont Dare Compare’ என்று தலைப்பிடப்பட்டு இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் தலைப்பு மிகவும் தன்னம்பிக்கையாகவும் இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor Prabhu Deva next film title Dont Dare Compare

People looking for online information on Dont Dare Compare, My dear bootham, Prabhudeva will find this news story useful.