"அற்புதம்".. DADA படம் பார்த்துட்டு நடிகர் பிரபு தேவா போட்ட நெகிழ்ச்சி போஸ்ட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டாடா திரைப்படம் குறித்து பிரபுதேவா எழுதியுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Actor Prabhu deva Appreciates DADA film crew Tweet goes viral
Advertising
>
Advertising

ரொமாண்டிக் திரைப்படமாக 'டாடா' திரைப்படம் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் S.அம்பேத் குமார்  தயாரிப்பில் 'டாடா' படத்தினை அறிமுக இயக்குனர் கணேஷ் K பாபு இயக்கியுள்ளார். இப்படத்தில் கவின் மற்றும் அபர்ணா தாஸ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  கவின் மற்றும் அபர்ணா தாஸூடன்  K.பாக்யராஜ், ஐஸ்வர்யா, ‘முதல் நீ முடிவும் நீ’ ஹரிஷ்,  பிரதீப் ஆண்டனி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Actor Prabhu deva Appreciates DADA film crew Tweet goes viral

இந்த படத்திற்கு எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார், கதிரேஷ் அழகேசன், எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார், சண்முக ராஜ் கலை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

பட ரிலீஸ் அன்று இந்த படத்தின் சிறப்புக் காட்சி சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில்  நடந்தது. இதில் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். படத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனிடையே கடந்த 10 ஆம் தேதி டாடா திரைப்படம் அமேசான் பிரேமில் வெளியானது.



குழந்தையை தனியாக வளர்த்துவரும் தந்தை பற்றிய கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. இதனிடையே நடிகரும் இயக்குநரும், கோரியோகிராஃபருமான பிரபு தேவா டாடா படம் பார்த்துவிட்டு அதுகுறித்து நெகிழ்ச்சி ட்வீட் ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.

அந்த ட்வீட்டில்,"டாடா படம் பார்த்தேன். இயக்குநர் மிக அருமையாக பணியாற்றியிருக்கிறார். கதாநாயகன் மற்றும் கதாநாயகி சிறப்பு. அற்புதமான வசனங்கள், மொத்த படக்குழுவும்  எக்ஸெலெண்ட். இந்த படம் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor Prabhu deva Appreciates DADA film crew Tweet goes viral

People looking for online information on Dada, Prabhu Deva will find this news story useful.