"ஆதி புருஷ் டீஸர் பார்த்தபோது குழந்தையாக மாறி விட்டேன்".. - மனம் திறந்த நடிகர் பிரபாஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'ஆதி புருஷ்'.

Advertising
>
Advertising

Also Read | ஹனிமூனில் விஜய் டிவி புகழ் & பென்ஸி.. இந்த குளிர் பிரதேசத்துக்கா போயிருக்காங்க? சூப்பர்

இதில் 'பாகுபலி' படப் புகழ் நடிகர் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் சயீப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

'வாரிசு' கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சன்சிட் பல்ஹாரா மற்றும் அன்கிட் பல்ஹாரா சகோதரர்கள் இசையமைத்திருக்கிறார்கள்.

ராமாயண காவியத்தை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோஃபைல்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் பூஷன் குமார், கிருஷன் குமார், ஓம் ராவத், பிரசாத்  சுடர், ராஜேஷ் நாயர் ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள்.

'ஆதி புருஷ்' இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகி இருக்கிறது.

படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த திரைப்படத்தின் டீசர் மற்றும் பிரம்மாண்டமான போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் ’ஆதி புருஷ்’ டீஸர் குறித்து கமெண்ட் அடித்த பிரபாஸ்,” ‘ஆதி புருஷ்’ டீஸரை முதன்முதலில் 3டி’ எஃபெக்டில் பார்த்தபோது ஒரு குழந்தையாக மாறி பரவசமடைந்தேன். இந்த டீஸரை ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் ரசிகர்களுக்காக 60க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். இது நிச்சயமாக திரையரங்குகளில் காணவேண்டிய ஒரு படம். இப்படத்திற்காக உங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டிக்காத்திருக்கும்

அதேவேளை அடுத்த 10 தினங்களுக்கு இப்படம் குறித்து பல சர்ப்ரைஸான கண்டெண்டுகளை வழங்கவிருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்கிறார். ‘அடுத்தடுத்த அப்டேட்களுக்கு நான் கியாரண்டி’ என்று பிரபாஸ் முன்வந்திருப்பது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ஆம் தேதி அன்று ஐமேக்ஸ் மற்றும் 3டி வடிவிலும் உலகம் முழுவதும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | VIDEO: அடேங்கப்பா..சொர்க்கத்தையே மிஞ்சும் BIGG BOSS வீடு! சும்மா ஜொலிக்குதே

தொடர்புடைய இணைப்புகள்

Actor Prabhas Talks about Adi Purush Movie Teaser

People looking for online information on Adi Purush Movie Teaser, Prabhas will find this news story useful.