பிரபல தெலுங்கு இயக்குனருடன் இணைந்த 'பாகுபலி' பிரபாஸ்.. புதிய படத்தின் செம அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாகுபலி பிரபாஸ் அடுத்து நடிக்கும்  புதிய  படத்தின் அப்டேட் பிரத்யேகமாக நமக்கு கிடைத்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | ஜெயிலர் படத்தை அடுத்து ரஜினி நடிக்கும் அடுத்த 2 படங்கள்.. போட்டோவுடன் வெளியான அப்டேட்..

தெலுங்கு நடிகர் பிரபாஸ் ‘பாகுபலி’ சீரிஸ் படங்களின் வெற்றிக்கு பிறகு பரந்த ரசிகர் பட்டாளத்தை பெற்றார். பாகுபலி படங்களுக்கு பின்னர் ஆக்சன் படமான 'சாஹோ' & கடந்த மார்ச் மாதம்  காதலை மையமாக வைத்து 350 கோடி ரூபாய் செலவில் ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் வெளிவந்த 'ராதே ஷியாம்' படத்தில்  நடித்திருந்தார். 

தற்போது பிரபாஸ் அடுத்து நான்கு பெரிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இது பிரபாஸ் ரசிகர்களிடம்  பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீபிகா படுகோனின் தெலுங்கு அறிமுகமபடமான, தற்காலிகமாக பிரபாஸ் 21 என பெயரிடப்பட்டுள்ள 'ப்ரோஜெக்ட் கே'  படம், 'ஆதி புருஷ்' மற்றும் கேஜிஎஃப் இயக்குனருடன் இணையும் 'சலார்', சந்திப் ரெட்டி வாங்காவுடன் 'ஸ்பிரிட்'  படம் என வரிசையாக படங்களை வைத்துள்ளார்.

தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் Project K படத்தினை வைஜெயந்தி மூவீஸ் சார்பில் தயாரிப்பாளர் அஸ்வினி தத் தயாரிக்கிறார்.

முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் துவங்கியது. இதில் நடிகை தீபிகா படுகோன், பிரபாஸ் கலந்து கொண்டனர்.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் அமிதாப் பச்சன் கலந்து கொண்டார். மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் நடிகை திஷா பதானி கலந்து கொண்டார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை திஷா பதானி நடிக்கிறார். 

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு 3 கட்டங்களாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்தது. தீபிகா படுகோன், பிராபாஸ், அமிதாப் பச்சன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.

சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் ஆதி புருஷ் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானது. ஆதி புருஷ் திரைப்படம் ஜனவரி மாதம் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபாஸ் தனது அடுத்த படமாக இயக்குனர் மாருதி இயக்கத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாருதி சமீபத்தில் தெலுங்கில் வெளியான பக்கா கமர்ஷியல் படத்தின் இயக்குனர் ஆவார்.

Also Read | "நயன் Passport photo ல கூட பளபளனு.." விக்னேஷ் சிவன் போட்ட வைரல் பதிவு! மனுசன் love பண்றாப்ள 😍

தொடர்புடைய இணைப்புகள்

Actor Prabhas New Film With Director Maruthi

People looking for online information on Maruthi, Prabhas, Prabhas New Film will find this news story useful.