கன்னட சூப்பர்ஸ்டார் புனித் ராஜ்குமாருக்கு (29.10.2021) அன்று உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கும் போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உய்ரிழந்தார்.

திரைப்பட உலகின் முன்னணி நடிகராக விளங்கும் புனித் ராஜ்குமார். இவர் மறைந்த கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரின் மகனும், சிவ ராஜ்குமாரின் தம்பியுமாவார். இவருக்கு அஸ்வினி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர் 1985 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக இருந்த பொழுது தேசிய விருதை வென்றவர்.4 முறை கர்நாடக மாநில விருதையும், 5 முறை தென்னிந்திய பிலிம்பேர் விருதையும் வென்றவர்.
கடைசியாக யுவரத்னா திரைப்படத்தில் வெள்ளித்திரையில் காணப்பட்ட புனித், தற்போது ஜேம்ஸ் என்ற அதிரடி ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்து வந்தார். இவருக்கு வயது 46. புனித் ராஜ்குமாரின் இறுதி சடங்கிற்கு அவரின் குடும்பத்தினர் மற்றும் அரசியல், திரையுலக பிரபலங்கள் பலர் வந்திருந்தனர். இவரது இறுதி சடங்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சூழ 31.10.2021 அன்று நடைப்பெற்றது.
இந்நிலையில் நடிகர் புனித் ராஜ்குமார் தன்னுடைய வாழ்நாளில் ஒருமுறையாவது தன்னுடைய அண்ணன் சிவராஜ்குமாரை வைத்து ஒரு படத்தை இயக்கி விட ஆசைப்பட்டதாகவும் ஆனால் அது தற்போது நிறைவேறாமல் போய்விட்டது என்பதையும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த் படத்தை லிங்கா படத்தை தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்க திட்டமிட்டதாகவும் தெரிகிறது.