இப்படி குட்டி பையனா மாறியிருக்கிறவரு.., தமிழ் சினிமாவில் செம பிரபலம். யாருன்னு சொல்லுங்க.?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகர் இணையத்தில் வெளியிட்டுள்ள ஃபேஸ்-ஆப் புகைப்படம் வைரல் அடித்து வருகிறது.

தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான படைப்புகளால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் பார்த்திபன். இயக்கம் மட்டுமின்றி நடிப்பிலும் இவர் கலக்கி வருகிறார். குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன், ஒத்த செருப்பு உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. இவர் தற்போது இரவின் நிழல் எனும் படத்தை உருவாக்கும் பணியில் இருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் பார்த்திபன் தனது சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஃபேஸ்-ஆப் செயலி மூலம் தன்னை சின்ன குழந்தையாக மாற்றி ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் இந்த பதிவில், ''உன் வயதிலிருந்து... உள் வயது இளமையாக இருக்க வேண்டியது இன்றியமையாதது!!!'' என பதிவிட்டுள்ளார். இவரின் இந்த போட்டோ இணையத்தில் வைரல் அடித்து வருகிறது.

 

தொடர்புடைய இணைப்புகள்

நடிகர் பார்த்திபனின் வேற லெவல் போட்டோ | Actor Parthiban's face app photo goes viral

People looking for online information on Radhakrishnan Parthiban will find this news story useful.