PS1: 'பொன்னியின் செல்வன்' படம் பார்க்க.. தஞ்சாவூர் வரும் பிரபல நடிகர்! போடு வெடிய

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன் படம் பார்க்க பிரபல நடிகர் தஞ்சாவூர் வர உள்ளார்.

Actor Parthiban Visits Tanjore for Ponniyin Selvan Fdfs
Advertising
>
Advertising

அமரர் கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் இரு பாகங்களாக இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Actor Parthiban Visits Tanjore for Ponniyin Selvan Fdfs

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண் மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். மேலும்   நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும், பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர்.  சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர்.

இப்படத்தில் பாண்டிய ஆபத்துதவிகள் பாத்திரத்தில், ரவி தாசன் கதாபாத்திரத்தில் கிஷோர் நடித்துள்ளார். ரியாஸ் கான், சோமன் சாம்பவன் கதாபாத்திரத்திலும், தேவராளன் கதாபாத்திரத்தில் வினயும், அர்ஜூன் சிதம்பரம், வராகுணன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  வரும் 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர  உள்ளது. இந்நிலையில் இந்த படத்தினை திரையரங்குகளில் ரசிகர்களுடன் காண நடிகர் பார்த்திபன் தஞ்சாவூர் வர உள்ளார். இதனை பிரத்யேக வீடியோ மூலம் அறிவிக்கப்பட்டுள்ளார். காலை காட்சிக்கு வர உள்ளதாகவும் பார்த்திபன் அறிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

Actor Parthiban Visits Tanjore for Ponniyin Selvan Fdfs

People looking for online information on Ponniyin Selvan FDFS, PS1, PS1 FDFS will find this news story useful.