தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான “நேரம்” என்ற படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். 2015 ஆம் ஆண்டு வெளியாகி மலையாள திரையுலகில் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட்டாக அமைந்த ‘பிரேமம்’ படத்தை கடைசியாக அல்போன்ஸ் புத்ரன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக, சாய்பல்லவி, மடோனா செபாஸ்டியன் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார்.
அல்போன்ஸ் புத்ரன் பிரேமம் படத்தை தொடர்ந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு முதல் திரைப்படமாக கோல்ட் படத்தை இயக்குகிறார். இந்த படத்தை ஆக்சன் திரில்லர் வகைமையில் உருவாக்குகிறார் அல்போன்ஸ். ஹீரோவாக பிரித்விராஜ் நடித்து தயாரிக்கிறார். பிரித்விராஜூக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். முன்னதாக அல்போன்ஸ், ஃபஹத் ஃபாசிலுடன் பாட்டு படத்தை இயக்குவதாக அறிவித்தார்.கேரளாவில் கோவிட் -19 கட்டுப்பாடுகள் காரணமாக பாட்டு படம் தள்ளிப்போகி உள்ளது. இந்த கோல்டு படத்தின் படப்பிடிப்பும் கோவிட் -19 கட்டுப்பாடுகள் காரணமாக கேரள மாநிலத்திற்கு வெளியே நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அல்போன்ஸ் புத்திரன் கோல்ட் படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதில் GOLD படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன என அறிவித்துள்ளார். முகநூலில் ரசிகர் ஒருவர் பட ரிலீஸ் பற்றி எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு அவர் பதில் அளித்துள்ளார். இதற்கு முன் முகநூலில் தங்கம் (GOLD) படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது படத்தொகுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் நேரம் மற்றும் பிரேமம் போன்றது அல்ல. இது இன்னொரு வகை திரைப்படம். சில நல்ல கதாபாத்திரங்கள், சில நல்ல நடிகர்கள், இரண்டு அல்லது மூன்று பாடல்கள் மற்றும் சில நகைச்சுவைகளுடன் மூன்றாவது படம். வழக்கம் போல் ஒரு எச்சரிக்கை! போரையும் அன்பையும் எதிர்பார்த்து யாரும் தியேட்டருக்கு வரக்கூடாது. என அல்போண்ஸ் புத்ரன் கூறியது குறிப்பிடத்தக்கது.